டெல்லி : மியான்மரில் ராக்கைன் மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்றும் அங்கு உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், மியான்மரின் ராக்கைன் மாநிலத்தின் நிலைமை கவலைக்குரியதாகவும், பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாகவும் உள்ளது. அனைத்து இந்தியர்களும் ராக்கைன் மாநிலத்தை விட்டு காலி செய்து அங்கிருந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
#WATCH | On Myanmar situation, MEA Spokesperson Randhir Jaiswal says, "We had issued an advisory for the Rakhine State where the situation there is very delicate, the security situation has deteriorated. We told all Indian nationals to evacuate themselves and move away from there… pic.twitter.com/UNqh2Wwm1u
— ANI (@ANI) March 15, 2024
மேலும் வேறு எங்கிருந்தும் இந்தியர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கடந்த 2021ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
ராணுவ ஆட்சியை கண்டித்து கிளம்பிய புரட்சிப் படைகள், ராணுவத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றன. இதனால் வாழ்வாதாரம் உள்ளிட்ட வசதிகளை தேடி மியான்மரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக புகழிடம் வந்தனர். கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரி ராணுவம் ஆட்சியை கைப்பற்றி மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது.
இதை தொடர்ந்து புரட்சிப் படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் ராணுவ ஆட்சியை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்களால் மியான்மரின் ராக்கைன் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து அங்கு ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுவதால் இந்தியர்கள் யாரும் அங்கே செல்ல வேண்டாம் என்றும், அங்கு உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க : டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் எம்எல்சி கவிதா கைது!