ஒட்டாவா/ கனடா: காலிஸ்தானி ஆதரவாளர்கள் பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலை முற்றுகையிட்டு, பக்தர்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக கனடா பிரதமர் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் இருப்பதாகவும், கனடா மக்கள் அனைவருக்கும் அவர்தம் மத நம்பிக்கைகளைச் சுதந்திரமாக கடைபிடிக்க உரிமை உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலில் நடந்த தாக்குதலை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கனடா மக்கள் அனைவருக்கும் அவர்கள் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க உரிமை உண்டு. இந்த விவகாரத்தை உடனடியாக கவனத்தில்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட பீல் பகுதி காவல்துறைக்கு என் நன்றிகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
The acts of violence at the Hindu Sabha Mandir in Brampton today are unacceptable. Every Canadian has the right to practice their faith freely and safely.
— Justin Trudeau (@JustinTrudeau) November 3, 2024
Thank you to the Peel Regional Police for swiftly responding to protect the community and investigate this incident.
இதற்கிடையில், கனடா எதிர்கட்சித் தலைவரான பியே போயிலியெவர், இந்த தாக்குதலை, ‘எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என கடும் கண்டனத்தை பதிவுசெய்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சி மக்களை ஒருங்கிணைத்து இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Completely unacceptable to see violence targeting worshippers at the Hindu Sabha Mandir in Brampton today.
— Pierre Poilievre (@PierrePoilievre) November 3, 2024
All Canadians should be free to practice their faith in peace. Conservatives condemn this violence unequivocally. I will unite our people and end the chaos.
தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூக அமைப்பான, ‘இந்து கனடியன் அறக்கட்டளை’ தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் கோயில் மீதான தாக்குதல் காணொளிகளைப் பகிர்ந்து, காலிஸ்தான் பயங்கரவாதிகள் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், "குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் தாக்கப்படுகின்றனர். இவை அனைத்தும் காலிஸ்தானி அரசியல்வாதிகளின் அனுதாபிகளின் ஆதரவில் நடக்கிறது," என்றும் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
A red line has been crossed by Canadian Khalistani extremists today.
— Chandra Arya (@AryaCanada) November 3, 2024
The attack by Khalistanis on the Hindu-Canadian devotees inside the premises of the Hindu Sabha temple in Brampton shows how deep and brazen has Khalistani violent extremism has become in Canada.
I begin to feel… pic.twitter.com/vPDdk9oble
கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யாவும் கோயில் மீதான தாக்குதலைக் கண்டித்து, காலிஸ்தானி தீவிரவாதிகள் சிவப்புக் கோட்டைத் தாண்டியுள்ளனர் என்று கூறியுள்ளார். இது கனடாவில் தீவிரவாதத்தின் எழுச்சியை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க |
ஒட்டாவாவில் இருக்கும் இந்தியத் தூதரகமும் இந்த தக்குதலுக்கு தங்களின் எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளது. இந்த சூழல்களால் உள்நாட்டிற்கு வரும் இந்திய மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, விண்ட்சரில் உள்ள இந்து கோயில் இந்திய எதிர்ப்புக் குழுக்களால் சூறையாடப்பட்டது பெரும் பிரச்சினைக்கு வழிவகுத்தது. எனவே, அரசு தலையிட்டு இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாண வேண்டும் என்பதே கனடா வாழ் இந்திய மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.