சென்னை: உடலுறவு என்பது இனப்பெருக்கத்திற்கான ஒரு கட்டமைப்பு. ஒருவர் மற்றொருவரிடம் அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வழி என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அதே போல், உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள்போல் உடலுறவும் மனித உயிர்களுக்கு தேவையான ஒன்று. இதில் ஆண், பெண் என்ற எவ்வித வேறுபாடும் இல்லை என எழுத்தாளர் லதா எழுதிய கழிவறை இருக்கை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவியலும் இதைதான் கூறுகிறது.
அந்த வகையில் உடலுறவில் ஆர்வம் கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் சில நேரங்களில் அதற்கு அடிமையாவதும் உண்டு என சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. உடலுறவின் மீது அதீத ஈடுபாடுகொள்வதால் அவர்களின் வாழ்கை, முன்னேற்றம், பொருளாதாரம், குடும்ப சூழல் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், உடலுறவுக்கு அடிமையாக இருக்கும் நபர்கள், அது குறித்து அவர்களே அறிந்திருப்பது இல்லை என்பதுபதான்.
sex-க்கு அடிமையாக இருப்பதன் அறிகுறிகள் என்ன?
- எதிர் பாலினத்தின் மீது அதீத ஈர்ப்பு
- கட்டுப்பாடற்ற சுய இன்பம் கொள்ளுதல், ஒரு நாளைக்கு 2-க்கும் மேற்பட்ட முறை
- ஆபாச படங்கள் பார்ப்பதில் அதீத ஆர்வம்
- ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் உடலுறவு
- புதிய நபர்களுடன் உடலுறவில் ஆர்வம் கொள்ளுதல்
- மன அழுத்தத்தைப் போக்க உடலுறவோ அல்லது சுய இன்பமோ கொள்ளுதல்
- தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாமல் பாலியல் தேடலில் ஆர்வம் காட்டுதல்
இதுபோன்ற பல அறிகுறிகளை வைத்து நீங்கள், sex-க்கு அடிமையானவரா? இல்லையா? என்பதை புரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற செயல்களால் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், அவரது துணையுடனான எதிர்கால மகிழ்ச்சியும் பறிபோகும் என மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
ஒருவர் sex-க்கு அடிமையாவதால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?
- பாலியல் தேடலுக்காக பணம் செலவு செய்தல்
- HIV உள்ளிட்ட பாலியல் தொற்றுக்கு வழிவகை செய்யும்
- மன உளைச்சல் ஏற்படும்
- தற்கொலை எண்ணம் தோன்றும்
- நம்பிக்கையின்மை
- குற்ற உணர்ச்சியுடன் பதற்றம்
உள்ளிட்ட பல்வேறு மன ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். மேலும், sex-க்கு அடிமையான நபர்கள் இந்த விஷயத்தை வெளியில் சொல்ல முடியாமலும், இதற்கான தீர்வு கிடைக்காமலும் தவிக்கும் நிலையில் சில நேரங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டலில் அவர்கள் ஈடுபடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம், அவர்களை எதிர்த்து சமாளிக்க குழந்தைகளால் முடியாது என்பதே. இந்நிலையில், இதுபோன்ற மனநிலையில் உள்ள நபர்கள் தங்களுக்கு உள்ளேயே கேள்விகளை கேட்டுக்கொண்டு, sex-க்கு அடிமை என்பதை புரிந்துகொண்டால், மனநல மருத்துவரையோ அல்லது ஒரு பொதுநல மருத்துவரின் ஆலோசனைப்படியோ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் என கிளீவ்லேண்ட் கிளினிக் என்ற மருத்துவ ரீதியான கட்டுரைகளின் இணையதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
sex- அடிமை தனத்தில் இருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும்?
- கூச்சம் மற்றும் தயக்கத்தை தவிர்த்து சிகிச்சைக்கு ஒத்துழைத்தல்
- sex தொடர்பான எண்ணத்தை திசை திருப்ப வேண்டும்
- உடற் பயிற்சி, விளையாட்டு, சமூக சேவை போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்
- தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும்
- மொபைல் மற்றும் கணினியில் உள்ள Porn சைட்டுகளை முடக்கவும்
- இறை நம்பிக்கையில் நாட்டம் செலுத்தலாம்
- புத்தகங்களை வாங்கி படிக்கலாம்
- நல்ல பாடல்கள் கேட்பது, சிறந்த திரைப்படங்கள் பார்ப்பது போன்றவைகளை செய்யலாம்
- குடும்பத்தில் உள்ளவர்களோடு அதீத நேரத்தை செலவிடலாம்
- குறிக்கோள் வைத்து அதற்காக வேலை இடத்தில் பணியாற்றலாம்
- யோகா மற்றும் தியானம் போன்றவைகளை மேற்கொள்ளலாம்
இதுபோன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி sex- அடிமை தனத்தில் இருந்து நீங்கள் மீண்டு வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தையும், நிம்மதியையும் பார்க்க முடியும். இந்த கட்டுரையை படித்த இந்த நேரம் முதல் உங்களுக்குள் இருக்கும் அடிமைதனத்தை தகர்த்தெரிந்து மீண்டுவர முயற்சி செய்யுங்கள். மேலும், இதில் இருந்து மீண்டுவர உங்களுக்கு உதவி தேவை என்றால் கூகுலில் sex Addicts Anonymous-ன் உதவியை நாடவும்.
இதையும் படிங்க: புரோடின் சப்ளிமெண்டுகளை உட்கொள்ள வேண்டாம்: ஐசிஎம்ஆர் கூறுவது என்ன? - Do Not Take Protein Supplements