ETV Bharat / health

மயங்க வைக்கும் மருத்துவம்..உலக மயக்க மருந்து தினத்தில் அதன் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்! - WORLD ANAESTHESIA DAY 2024

உலக மயக்க மருந்து தினம் அக்டோபர் 16ம் தேதி கடைப்பிடிக்கப்படுக்கிறது. இந்நாளின், வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Oct 16, 2024, 12:59 PM IST

மருத்துவ சிகிச்சையில் மயக்க மருந்தின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி 'உலக மயக்க மருந்து தினம்' கடைபிடிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மயக்க மருந்து வழங்குநர்கள், நோயாளிகளுக்கு வலியற்ற அறுவை சிகிச்சைக்கு உதவுவதால் அவர்களை கெளரவிக்கும் நாளாகும் இது செயல்படுகிறது.

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, அறுவை சிகிச்சை செய்யும் போது எந்த வித மயக்க மருந்தும் நோயாளிக்கு அளிக்கப்படாது. இதற்கு பதிலாக நோயாளி மயக்கமடையும் வரை தாக்கி அல்லது மது போன்ற சுய நினைவை இழக்கும் உணவுப்பொருளை கொடுத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இன்று, இதய அறுவை சிகிச்சை, சிசேரியன், மூளை நரம்பியல் சார்ந்த சிகிச்சை போன்ற நுண்ணிய சிகிச்சைகள் செய்யப்பட காரணமாக இருப்பது மயக்க மருந்து. அதுமட்டுமல்லாமல், நவீன மருத்துவ வளர்ச்சிக்கு விதை போட்டது இந்த மயக்க மருந்து தான்.

வரலாறு?: 1846ம் ஆண்டு இதே தேதியில், மயக்க மருந்து முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு வித்திட்டவர் மார்டன் என்ற மருத்துவர். வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் 'ஈதரை' மயக்க மருந்தாக, அமெரிக்காவின் பாஸ்டன், மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் வெற்றிகரமான செயல்விளக்கத்தை அளித்தார்.

நோயாளியின் கழுத்தில் இருந்த ரத்த கட்டியை மயக்க மருந்து பயன்படுத்தி முதல் முதலில் வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து காட்டினார். இதனால் தான் இன்று வரை அக்டோபர் 16ம் தேதியை உலக மயக்க மருந்து தினமாக கடைப்பிடித்து வருகிறோம். இன்று வரை, நோயாளிகளுக்கு எந்த வலியும் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்து சுகாதாரப் பராமரிப்பின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உலக பெருமூளை வாதம் தினம்; உலகளவில் 18 மில்லியன் பேர் பாதிப்பு!

2024ம் ஆண்டிற்கான தீம்: 2024 ஆம் ஆண்டு உலக மயக்க மருந்து தினத்தின் கருப்பொருள் 'தொழிலாளர் நலம்' (Workforce Well-being). மயக்க மருந்து நிபுணர்களின் உலகக் கூட்டமைப்பு (WFSA) மயக்க மருந்து பணியாளர்கள் மற்றும் அவர்கள் சேவை செய்யும் நோயாளிகளின் நல்வாழ்வின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்த இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது. மயக்க மருந்து நிபுணர்களின் உலகக் கூட்டமைப்பு, ஒவ்வொரு வருடமும் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல முறைகளைப் பயன்படுத்தும்.

அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய மயக்க மருந்துகள்:

ஜெனரல் அனஸ்தீசியா (General Anaesthesia): மைய நரம்பு மண்டலத்தில் முழு செயல்பாட்டையும் அடக்குகிறது. இதனால், உடல் முழுவதும் மயக்க நிலைக்கு உள்ளாகிறது. மூளை சார்ந்த மற்றும் இதய சிகிச்சைகளுக்கு இதை பயன்படுத்துகின்றனர்.

லோக்கல் அனஸ்தீசியா (Local Anaesthesia): உடலில் உள்ள ஒரு இடத்தை மற்றும் மயக்க நிலைக்கு கொண்டு செல்லும். விரல், பல், கண் என ஏதேனும் ஒரு இடத்தை மயக்க இது பயன்படுகிறது.

மேஜர் அனஸ்தீசியா (Major Anaesthesia) : உடலில் ஒரு சிறிய பகுதியை மட்டும் உணர்ச்சிகளற்ற பகுதியாக மற்றுகிறது. கை,கால், இடுப்புக்கு கீழான அறுவை சிகிச்சைகள் முதல் உடலில் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் மட்டும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் இந்த வகையில் செய்யப்படும்.

இதையும் படிங்க: உலக பார்வை தினம் 2024; "இனி, மலிவு விலையில் கண்ணாடிகள்"..WHO முன்னெடுப்பு!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.