ETV Bharat / health

ஏன் 'தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்' என்கிறார்கள் தெரியுமா? இந்த நன்மைகளுக்காக தான்! - WHY AN APPLE A DAY IS GOOD FOR YOU

தினசரி ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வரும் போது, முகப்பரு மற்றும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்கும். தினசரி ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் மற்ற நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)
author img

By ETV Bharat Health Team

Published : 15 hours ago

'தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை' Eating an apple daily keeps doctor away என்ற வாக்கியத்தை நாம் சிறுவதிலேயே கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ள ஆப்பிளை தினசரி சாப்பிட்டு வர என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.

இதய ஆரோக்கியம்: தினசரி ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடும் போது அப்பிளில் உள்ள அதிக பிளவனாய்டுகள் இருதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை, ஆப்பிள் 35% வரை குறைக்கிறது என தெரியவந்துள்ளது. ஆப்பிள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுவதால், இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

முக பொலிவு: இளம் வயதிலேயே தோல் சுருங்கி வயதான தோற்றம் ஏற்படுவதை ஆப்பிள் தடுக்கிறது. ஆப்பிளில் உள்ள அபிஜெனின்,ஜெனிஸ்டீன், ப்ளோரிசின் மற்றும் பிற பாலிஃபீனால்கள் வயதான சருமத்தை நீக்கும். அதுமட்டுமல்லாமல், சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். முகப்பருக்களுக்கு காரணமாக இருக்கும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துவதோடு தோல் புற்றுநோயைத் தடுக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

செரிமானம் சீராகும்: அப்பிளில் இருக்கும் கரையாத நார்ச்சத்துக்களான பெக்டின்(Pectin) மற்றும் ஹெமிசெல்லுலோஸ் (Hemicellulose) குடல் நுண்ணுயிர்கள் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் இயக்கத்தை மேம்படுத்தும். ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

எடை இழப்பு: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு அப்பிள் சிறந்த பழமாக இருக்கிறது. அப்பிளில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். மேலும், உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை வெளியேற்ற உதவியாக இருக்கும். ஆகையால், உடல் எடையை குறைப்பதிலும், கெட்ட கொழுப்பை குறைப்பதிலும் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

நீரிழிவை கட்டுப்படுத்தும்: இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த ஆப்பிள் உதவியாக இருக்கும். ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் இயற்கையான இனிப்பு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்தை குறைக்கும். ஆனால், நீரிழிவு நோயாளிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்பிள்களை சாப்பிட வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)
  • இது தவிர, தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர நினைவாற்றல் அதிகமாகும்.
  • இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் நுரையீரலை சேதப்படுத்தும் ஃப்ரி ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.
  • அப்பிளில் கால்சியம், துத்தநாகம் , பொட்டாசியம் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாத்து கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
  • புரோசியானிடின் பி2 எனப்படும் பாலிஃபீனால் ஆப்பிளில் இருப்பதால், இது முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லையை போக்குகிறது.

ஆப்பிளை எப்போது சாப்பிட்டால் பலன் அதிகம்: காலை உணவுக்கு பின் அல்லது மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிள் சாப்பிட்டால் அதுனுடைய அனைத்து நன்மைகளையும் பெறலாம். ஆப்பிள் ஜீரணிக்க கடினம் என்பதால், காலை வெறும் வயிற்றில் அல்லது இரவு தூங்க செல்வதற்கு முன் சாப்பிடக்கூடாது.

இதையும் படிங்க:

இடுப்பு கொழுப்பை கரைக்கும் கறிவேப்பிலை..வெறும் வயிற்றில் தினமும் இப்படி சாப்பிடுங்க!

டைப் 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர்..ஆய்வு சொல்வதை தெரிந்து கொள்ளுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.