சென்னை: நள்ளிரவில் இனிப்பை தேடும் பிரச்சனை குறித்து அறிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களும், மாதவிடாய் முடிந்த 93 பெண்களும் பங்கேற்பாளர்களாக இருந்தனர்.
அவர்களது மூளையில் உள்ள நியூரான்களின் வகைகள், கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். இவ்வாய்வில் ஆராய்ச்சியாளர்கள் MRI ஸ்கேன்களை பயன்படுத்தி, பங்கேற்பாளர்களின் மூளை செயல்பாட்டை கண்காணித்து, இது குறித்த ஆய்வை, ஜாமா நெட்வொர்க் ஓபன் இதழில் வெளியிடப்பட்டனர். அந்த ஆய்வறிக்கையில், தனிமையில் இருப்பது தான் சர்க்கரை நிறைந்த உணவுகளின் மீதான ஆசையை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதிகமான தனிமையை அனுபவித்தவர்கள் அதிக உடல் கொழுப்பை கொண்டிருந்தார்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள், உணவிற்கு அடிமையாவது, கட்டுப்பாடற்று அதிகமாக உண்பது போன்ற சீரற்ற உணவு பழக்கத்தை கடைபிடித்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது. அதே வேளையில், கட்டுப்பாட்டுடன் சாப்பிடுபவர்கள் அதாவது டயட் மேற்கொள்ளுபவர்கள் குறைந்த அளவிலான எதிர்வினையை கொண்டிருந்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியரான மூத்த ஆய்வு எழுத்தாளர் அபர்னா குப்தா, உடல் பருமன், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளைப் பாதைகளை கவனிக்க வேண்டும். சமூக தனிமைப்படுத்துதல், அதாவது சமூக தொடர்பின்றி தனிமையில் இருப்பது உணவு படியை ஏற்படுத்தும் என்று கூறினார்.
இதையும் படிங்க: நல்ல தூக்கத்திற்கு பாதங்களை கழுவ வேண்டுமா? - நிபுணர்களின் கருத்து என்ன?