ஹைதராபாத்: நமது சமையலறையில் மூலப்பொருளாக இருக்கும் இலவங்கப்பட்டை உணவிற்கு சுவை கொடுப்பது மட்டுமல்லாமல் நீரிழிவை கட்டுப்படுத்துகிறது எனப் பரவலாக பேசப்பட்டு வருவது உண்மைதானா? இலவங்கப்பட்டைக்கும் சர்க்கரை நோயிற்கும் என்ன சம்பந்தம்? அதன் பன்புகள் என்ன? என்பதை விரிவாக காணலாம்.
இலவங்கப்பட்டை பயன்கள்:
- இலவங்கப்பட்டை ஃபிளாவனாய்டுகள், தியாமின்,இரும்புச்சத்து போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியுள்ளது
- ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டது
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது
- உயர் இரத்த அழுத்தத்தை போக்க உதவியாக இருக்கிறது
- பல்வலி, ஈறு வலிக்கு சிறந்த மருந்தாகும்
- தினமும் 1/4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படும் என உணவியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீலதா கூறுகிறார்.
எப்படி எடுத்துக்கொள்வது?:
- தினமும் காலை மற்றும் மாலையில் 1/4 ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால், இன்சுலின் அளவு அதிகரித்து, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைகிறது.
- சர்க்கரை நோயாளிகள் காலை மற்றும் மாலையில் இலவங்கப்பட்டை தேநீரை குடிப்பதன் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயளிகளுக்கு இரத்த அளவைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை பயனுள்ளதாக இருக்கிறது என்று கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
- டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 543 நபர்களுக்கு, ஒரு நாளைக்கு 120 மில்லிகிராம் முதல் 6 கிராம் வரை இலவங்கப்பட்டை பொடி உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
- மற்றவர்களுக்கு வழக்கமான மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மாத்திரையை உட்கொண்டவர்களை விட இலவங்கப்பட்டையை உட்கொண்டவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது.
இலவங்கப்பட்டையின் மற்ற பயன்கள்:
- காலை உணவுக்குப் பிறகு இலவங்கப்பட்டை டீ குடிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைப்பதாக மருத்துவர் கூறுகிறார். அதுமட்டுமல்லாது, இலவங்கப்பட்டை, மிளகு இரண்டையும் சம அளவு போட்டு கஷாயம் செய்து குடிப்பதன் மூலம் சளி குணமாகிறது.
- அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப் புழுக்களைத் தடுக்க இலவங்கப்பட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் இலவங்கப்பட்டை முக்கிய பங்காற்றுகிறது.
- பொதுவாகவே, இலவங்கப்பட்டையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடனட், அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதாக கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.