ETV Bharat / health

மெஹந்தி செக்க சிவப்பாக பிடிக்க வேண்டுமா? மறக்காமல் கையில் 'இதை' தடவுங்கள்! - Tips for mehndi darker overnight - TIPS FOR MEHNDI DARKER OVERNIGHT

MEHANDI COLOR TIPS FOR HANDS: மெஹந்தி போட்டதும் பெண்களின் கை சிவக்க என்னென்ன டிப்ஸ்களை செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits- ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 11, 2024, 12:41 PM IST

ஹைதராபாத்: வீட்டில் விஷேசம் என்றால் போது, பெரியவர்கள் ஒரு புறம் தடல் புடலாக வேலைகளை பார்க்க, மறுபுறம் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம் என்பதை யோசிக்க தொடங்கி விடுவார்கள். அந்த வரிசையில் முதலில் வருவது மெஹந்தி தான்.

பெண்கள், கைகளில் மருதாணி அல்லது மெஹந்தியை போட்டுக் கொண்டு நடந்தால் போதுமே தானாகவே கலை வந்துவிடுகிறது. அதிலும், திருமணத்தின் போது மணமகள் கையில் போடும் மெஹந்தி எவ்வளவு நிறத்தில் பிடிக்கிறதோ, அந்த அளவிற்கு அவர்களது கணவரை காதலிக்கிறார்கள் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

ஆனால், சில நேரங்களில் மருதாணி அல்லது மெஹந்தி நன்றாக நிறம் கொடுக்கவில்லை என்றால் அப்போது பெண்கள் படும் கவலைக்கு அளவே இருக்காது. இப்படியான சூழ்நிலையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றினால், உங்கள் கைகளும், சந்தோஷத்தில் உங்கள் கணவரின் கண்ணமும் சிவக்கும்! எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்ளுங்கள்..

இதையும் படிங்க: ஆண்களை விட பெண்கள் தான் அதில் ஆர்வம் உள்ளவர்கள்.. ஆய்வு கூறுவது என்ன?

மெஹந்தி போட்டதும் உங்கள் கைகள் சிவக்க சில டிப்ஸ்!

  • மெஹந்தியைப் போடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்
  • மெஹந்தி போடுவதற்கு முன்னதாக, மாய்ஸ்சுரைசர் மற்றும் எந்த வகையான கிரீம்களையும் கைகளில் தடவக்கூடாது
  • மெஹந்தியை இயற்கையாகவே காய விடுங்கள். சீக்கிரமாகவே காய வைக்க வேண்டும் என ஹேர் ட்ரையர் அல்லது ப்ளோ ட்ரையரை பயன்படுத்தினால் நல்ல நிறம் வராது
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் நான்கு கிராம்புகளை சேர்த்து சூடாக்கவும். இப்போது, கல் சூடாகி வரும் ஆவி, உங்கள் உள்ளங்கை மற்றும் விரல்களில் படும்படி காட்ட வேண்டும். இப்படி செய்தால் நல்ல சிவப்பு நிறம் கிடைக்கும். மெஹந்தி காய்ந்த பின்னரே இதை செய்ய வேண்டும்.
  • மேலும், மெஹந்தி நன்றாக காய்ந்ததும், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்த சிரப்பை கைகளில் தடவவும்.
  • மெஹந்தி காய்ந்ததும் கைகளை கழுவிய பின்னர், நீலகிரி எண்ணெய் தடவி வந்தால் மெஹந்தி நல்ல சிவப்பாக பிடிக்கும்.
  • பொதுவாக, சில சமயங்களில் மெஹந்தி போட்டவுடன் உடனடியாக நிறம் வராது. இரண்டு மூன்று நாட்கள் கழித்து நல்ல நிறம் வந்துவிடும். அதனால் தான் திருமணம் போன்ற சடங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு மெஹந்தி போடுவது சிறந்தது. இப்படி செய்தால் கைகள் சிவக்கும். நீங்களும் இந்த முறை மெஹந்தியை பயன்படுத்தும்போது இந்த குறிப்புகளை கண்டிப்பாக பின்பற்றி பாருங்கள்.
சண்டை போட்டாலும் காதல் குறையாமல் இருக்க வேண்டுமா? உங்களுக்காகத்தான் இந்த தகவல்.!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.