ETV Bharat / health

இதய நோய் முதல் முடி பிரச்சனை வரை..வல்லாரை கீரையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள் இதோ!

வல்லாரை சாற்றுடன் நல்லெண்யை சேர்த்து பக்குவமாக காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்..இப்படி, வல்லாரையில் அடங்கியுள்ள மற்ற நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

author img

By ETV Bharat Health Team

Published : Oct 10, 2024, 1:12 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (GETTY IMAGES)

சத்துக்கள் நிறைந்த தாவரங்களில் ஒன்றாக இருப்பது ஆரை வகைகள். இந்த ஆரைகள் மூன்று வகைகளாக, அதாவது ஆரை,புளியாரை மற்றும் வல்லாரை என சிறந்த கீரைகளாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, இந்த வல்லாரை கீரையில் அனைத்து நன்மைகளும் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை என்ற பெயரை பெற்றதாக முன்னோர்கள் கூறிவைத்துள்ளனர்.

வல்லாரையில் இருக்கும் சத்துக்கள்:

  • இரும்புச்சத்து
  • சுண்ணாம்புச்சத்து
  • வைட்டமின் A
  • வைட்டமின் C
  • தாது உப்புக்கள்

வல்லாரை நன்மைகள்:

  • ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது
  • வல்லாரை கீரையுடன், சிறிதளவு பாதம், ஏலக்காய், மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைத்து தினமும் காலை மற்றும் மாலை பாலில் கலந்து குடித்தால் இதயம் தொடர்பான நோய்கள் குணமாகின்றன
  • வாய்ப்புண் இருக்கிறவர்களுக்கு வல்லாரை சிறந்த மருந்தாக இருக்கிறது. காலை மற்றும் மாலையில், நான்கு ஐந்து பச்சை வல்லாரை இலைகளை மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் சரியாகிறது
  • குடல் புண் மற்றும் வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது
  • வல்லாரை கீரை பொடியில் பல் துலக்குவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்குவது மட்டுமல்லாமல், பற்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன
  • ஞாபக சக்தி அதிகரிக்க வல்லாரை கீரையை தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது. வல்லாரையில் தோசை, சட்னி, சூப் என வகை வகையாக செய்து சாப்பிடலாம்
  • வல்லாரையில் நிறைந்துள்ள சத்துக்கள் மூளையை சோர்வடையாமல் பார்த்துக்கொள்கிறது
  • தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி, உடல் எரிச்சல், மூட்டு வலி, சிறுநீர் மஞ்சள் நீறமாக போவதை வல்லாரை சரி செய்கிறது
  • வல்லாரை இலைகளை நிழலில் நன்றாக காயவைத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை தினமும் தூங்குவதற்கு முன் பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்து விடுகின்றன. கூடுதலாக, மலச்சிக்கல்லை போக்குவதோடு வயிற்றுப்புண், குடல்ப்புண் ஆகியவற்றை சீர் செய்கிறது.
தினமும் வெற்றிலை சாப்பிட்டால் இம்புட்டு நன்மைகளா..இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
  • கண்களில் பிரச்சனை உள்ளவர்கள், ஒரு கைப்பிடி வல்லாரை இலைகளை எடுத்து அரைத்து சாப்பிடவேண்டும். பின்னர், பசும்பால் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், கண் எரிச்சல், கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சனைகள் சரியாகிறது
  • வல்லாரை கீரையுடன் இரண்டு பாதாம் பருப்பை சேர்த்து தினமும் அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெருவதுடன் குரல் இனிமையாக மாறுகிறது
  • கீரையுடன் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வருவதால் உடல் சூடு குறைகிறது
  • வல்லாரையுடன் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து, தினசரி ஒரு நெல்லிக்காய் அளவில் எடுத்துக்கொண்டால் சருமத்தில் ஏற்படும் சொறி, எரிச்சல், சரும பிரச்சனைகள் குணமாகிறது
  • வல்லாரை சாற்றுடன் நல்லெண்யை சேர்த்து பக்குவமாக காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை தினசரி தலையில் தடவி வருவதால் முடி அடர்த்தியாக வளரும்
  • வல்லரை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் ஏற்பட்ட இடங்களில் கட்டி வருவதால் வீக்கம் விரைவில் குறையும் வாய்ப்புகள் உள்ளது.

வல்லாரையில் என்ன சமைக்கலாம்?:

  • வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிடலாம்
  • உளுந்தை நன்றாக வறுத்து, அதனுடன் வல்லாரை, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்
  • வல்லாரையுடன் பாசி பருப்பு சேர்த்து சமைத்தால் தோசை, இட்லியுடன் வைத்து சாப்பிடலாம்
  • வல்லாரையை நிழலில் காயவைத்து அரைத்து பொடியாக செய்து சாப்பிடலாம்

கவனம் தேவை: வல்லாரையுடன் புளி சேர்த்து சமைக்க கூடாது. புளி சேர்த்து செய்வதால் அதனுடைய மருத்துவ குணங்கள் நீங்குகின்றது. வலிப்பு நோயுடைய குழந்தைகள் வல்லாரை கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அளவிற்கு மீறி இதை சாப்பிடுவதால் தலை சுற்றல், வாந்தி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தினசரி உணவில் 5 முதல் 10 மில்லி கிராம் அளவு வரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: இதயம் முதல் முடி ஆரோக்கியம் வரை.. ஊற வைத்த அத்திப்பழத்தில் இத்தனை நன்மைகளா?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.