ETV Bharat / health

ஹாஸ்பிட்டல் வரும் 10ல் மூவருக்கு டெங்கு.. ஹைதராபாத்தில் அதிகரிக்கும் பாதிப்பு.. டாக்டர்கள் அட்வைஸ் என்ன? - Dengue Spread in Hyderabad - DENGUE SPREAD IN HYDERABAD

Dengue Spread in Hyderabad: ஹைதராபாத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல், மூட்டு வலி பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Charminar, Dengue related file image
Charminar, Dengue related file image (Credit- ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 1:35 PM IST

ஹைதராபாத்: காய்ச்சல் காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு 10 பேரிலும் குறைந்தபட்சமாக 3 முதல் 4 நபர்கள் டெங்கு பாதிப்புக்கு ஆளாகின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் வெப்ப அலை வீசி வந்த நிலையில், அவ்வப்போது கோடை கால பருவ மழையும் பெய்து வருகிறது.

மழைக்காலம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், இது தொற்றுகள் மற்றும் நோய்களுக்கான காலமாகவும் இருக்கின்றது. குறிப்பாக, மழை காலத்தில் அங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரால் டெங்கு பாதிப்பு ஏற்படும் நிலையில், ஹைதராபாத்தில் இந்த வருடம் தொடங்கி தற்போது வரை 600க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்ற தகவல் குடியிருப்பு வாசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் பெய்து வரும் பருவ மழை காரணமாக, ஆங்காங்கே தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்குவிற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, ரங்காரெட்டி, சங்காரெட்டி,ஹைதராபாத், மேட்சல்-மல்காஜ்கிரி ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளேட்லெட் வீழ்ச்சி(Low Platelet Count) : தட்டணுக்குள் (Platelet) குறைவது டெங்கு பாதிப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று என எச்சரிக்கை விடுக்கின்றனர் மருத்துவர்கள். செகந்தராபாத் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்டும் ஒவ்வொரு 10 நபர்களிலும் 3 முதல் 4 நபர்கள் டெங்கு பாதிப்புக்கு ஆளாகின்றனர். டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தட்டணுக்கள் குறைவதோடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தொடர்பான பிரச்சனைகளையும் எதிர்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போல, கொசுக்களால் ஏற்படும் மற்றொரு வகையான கன்யா காய்ச்சலால் (Ganya fever) பாதிக்கப்படுபவர்கள் கடுமையான மூட்டு வலியையும் எதிர்கொள்கின்றனர். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முதற்படியாக விழிப்புணர்வே முக்கியம் என்கிறார் கிம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சிவராஜ்.

டெங்கு காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவத்தை மருத்துவர் சிவராஜ் வலியுறுத்துகிறார். காய்ச்சல் குறைந்த பிறகும், நோயாளிகள் தங்களின் பிளேட்லெட் எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.

டெங்கு அறிகுறி: ரத்தப்போக்கு, கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள், ரத்த அழுத்தம் குறைதல், வாந்தி, வயிற்று வலி அல்லது கடுமையான சோம்பல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், ஏனெனில் இவை மூளை இரத்தக்கசிவு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

குறிப்பாக, டெங்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கொசு கடித்த 4-5 நாட்களுக்கு பின்னர் தான் அறிகுறிகள் தோன்ற தொடங்குவதாக கூறும் மருத்துவர், அதிகபடியான காய்ச்சல் (102 டிகிரி), கண்களுக்குப் பின்னால் வலி, மலம் கழிக்கும் போது வலி, உடல்களில் சிவப்பு புள்ளிகள் காண தொடங்கினால் டெங்குவிற்கான அறிகுறி என்கிறார். மேலும், ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக NS1 ஆன்டிஜென் சோதனை செய்யப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

தடுப்பது எப்படி?: அதிகபடியான காய்ச்சல், தலைவலி மற்றும் தொண்டை வலி போன்ற வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால்,இளநீர் மற்றும் மோர் போன்ற இயற்கை பாணங்களை தவறாமல் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: வாரத்திற்கு இத்தனை அடி நடந்தால் போதுமா? சென்னைவாசிகளின் லேட்டஸ் ஃபேவரைட் வாக்கிங் ஸ்பாட் இது தான்! - CHENNAI HEALTH WALK

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.