சென்னை: இயற்கையோடு பின்னி பிணைத்து வாழ்ந்து வந்தால் மனம் மற்றும் உடல் நலம் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள் சித்தர்கள். இவர்கள் எதிர்கால சந்ததியினருக்காக விட்டுச் சென்ற விலைமதிப்பற்ற சொத்து யோகாசனம் என்றால் அது மிகையாகாது. அதிலும், இயற்கையோடு ஒன்றி வாழும் மிருகங்கள் மற்றும் பறவைகளை உண்ணிப்பாக கவனித்து அதில் இருந்து ஆசனத்தை உருவாக்கியுள்ளனர்.
நாய், பூனை, ஒட்டகம், பாம்பு, பட்டாம்பூச்சி, கழுகு உள்ளிட்ட ஏராளமான உயிரினங்களின் செயல்களை வைத்து உருவாக்கப்பட்ட ஆசனங்கள் இன்று வரை மட்டும் அல்ல இனியும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மக்களின் நல்வாழ்விற்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஊர்வன முதல் பறபன வரை உள்ள ஆசனங்கள் எவை?
- மீன் போஸ் (மத்ஸ்யாசனம்)
- வெட்டுக்கிளி போஸ் (ஷாலபாசனம்)
- கோப்ரா போஸ் (புஜங்காசனம்)
- பட்டாம்பூச்சி போஸ் (பாதகோனாசனா)
- டால்பின் பிளாங்க் போஸ் (மகர அதோ முக ஸ்வனாசனா)
- கீழ்நோக்கிய நாய் போஸ் (அதோ முக ஸ்வனாசனா)
- மேல்நோக்கி நாய் போஸ் (உர்த்வா முக ஸ்வனாசனா)
- பூனை நீட்சி (மர்ஜாரியாசனா)
- பசு முகம் காட்டி (கோமுகாசனம்)
- கழுகு போஸ் (கருதாசனம்)
- ஒரு கால் புறா போஸ் (ஏக பாத ராஜ கபோதாசனம்)
- ஒட்டக போஸ் (உஸ்ட்ராசனா)
- மயில் தோரணம் (மயூராசனம்)
- குரங்கு போஸ் (ஹனுமனாசனம்)
- தேள் போஸ் (விரிச்சிகாசனா)
- யானை போஸ்
- முயல் போஸ்
- கங்காரு போஸ்
- குதிரை போஸ்
- தவளை போஸ்
- கழுதை போஸ்
- காகம் போஸ்
- சிங்க போஸ் (சிம்ஹாசனம்)
இத்தனை வகையான ஆசனங்களும் அவற்றின் செயல்பாடுகளை கவனித்து உருவானவை. இவை ஒவ்வொன்றை மேற்கொள்ளும்போதும், உடல் மற்றும் மனதளவில் பல்வேறு சிறந்த மாற்றங்கள் ஏற்படும் என யோகா பயிற்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
யார் யார் யோகாசனம் செய்ய வேண்டும்? இன்றைய சூழலில் பிறந்து பூமிக்கு வந்து பேச ஆரம்பித்து இருக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பலரும் சொல்லும் பொதுவான ஒரு வார்த்தை டென்ஷனா இருக்கு அல்லது ஸ்ட்ரஸ்ஃபுள்ளா இருக்கு என்பதாகும். இந்த டென்ஷன் மற்றும் ஸ்ட்ரஸ்-க்கு யோகா ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என யோகா பயிற்ச்சியாளர்கள் கூறுகின்றனர். படிக்கும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் நபர்கள், அமர்ந்தபடி வேலை பார்க்கும் நபர்கள், முதியோர் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டோர் என அனைவருமே யோகா மேற்கொள்ளலாம்.
இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? மிக முக்கியமாக கூற வேண்டும் என்றால் நீங்கள் யோகாவை தொடர்ந்து மேற்கொள்ளும்போது இயற்கையோடு ஒரு புதிய உறவு உருவாகும். மனம் அமைதி பெறும், அனைத்திலும் நிதானம் பிறக்கும், தெளிவான சிந்தனை மற்றும் செயலாற்றலை பெற முடியும். உடல் மற்றும் உடல் உறுப்புகள் என அனைத்தும் நலன் பெறும்.
இதையும் படிங்க: உலக யோகா தினம்: 12 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை முயற்சியில் சிறுவர், சிறுமிகள்! - International Yoga Day