ETV Bharat / health

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஜோவர் (சோள) ரொட்டி செய்வது எப்படி?...சப்பாத்திக்கு பெஸ்ட் ஆல்டர்னேட்டிவ் இதான்! - karnataka special jowar roti recipe

author img

By ETV Bharat Health Team

Published : Sep 4, 2024, 11:15 AM IST

karnataka special jowar roti recipe in tamil: சத்தான மற்றும் சுவையான சோள ரொட்டி எளிதாக எப்படி செய்யலாம் என்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credits - GETTY IMAGES)

ஹைதராபாத்: கர்நாடகாவின் முக்கியமான உணவாக இருக்கும் இந்த சோள ரொட்டி, உடல் எடை, நீரிழிவு, இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? இனிமே, உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு பதிலாக இந்த சோள ரொட்டியை செய்து சாப்பிட்டு பாருங்கள். பலன்கள் ஏராளம்..!

தேவையான பொருட்கள்:

  • ஜோவர் (சோள) மாவு - 1 கப்
  • தண்ணீர் - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • நெய் - தேவையான அளவு

ஜோவர் ரொட்டி செய்முறை:

  • சோள ரொட்டி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.
  • இப்போது, சோள மாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டுவிடுங்கள். மாவு முழுவதும் ஈராமக இருக்கும்படி, ஒரு ஸ்பேட்டுலா அல்லது கரண்டியால் கலந்து, மூடி வைத்து விடுங்கள். சூடு குறையும் வரை அந்த பாத்திரத்தை தனியாக வைக்கவும்.

[குறிப்பு: தண்ணீரை எடுக்க எந்த கப் பயன்படுத்தப்பட்டதோ அதே கப்பில் தான் மாவையும் எடுக்க வேண்டும்]

  • மாவு வெதுவெதுப்பானதும், ஒரு அகலமான பாத்திரத்தில் மாவை போட்டு 5 நிமிடங்களுக்கு கைகளால் நன்கு பிசையவும்.
  • மாவு பிசுபிசுப்பாக இருந்தால் இன்னும் கொஞ்சம் சோள மாவு சேர்த்து பிசையவும். மாறாக, மாவு கடினமாக இருந்தால் உங்கள் கைகளை சிறிது ஈரப்படுத்தி பிசையவும்.
  • மாவு கைகளில் ஒட்டாத அளவிற்கு பிசைந்த பின்னர், சம அளவு உருண்டைகளாக மாவை உருட்டி மூடி வைக்கவும். இல்லையெனில், மாவு காற்றில் உலர்ந்து போகும் வாய்ப்பு உள்ளது.
  • இப்போது, ஒரு தட்டில் சிறிய அளவு சோள மாவை எடுத்துக்கொள்ளவும். பிறகு, ஒரு உருண்டையை எடுத்து மாவில் தேய்த்து, உள்ளங்கையை பயன்படுத்தி சப்பாத்தி போல் மெல்லியதாக அழுத்தவும்.
    உள்ளங்கையால் மாவை தட்டவும்
    உள்ளங்கையால் மாவை தட்டவும் (credits - GETTY IMAGES)
  • அதன்பிறகு, நன்றாக தட்டிய மாவை சூடான தோசை கல்லில் போட்டு அரை நிமிடம் விடவும். தயாராகும் ரொட்டி மீது ஈரமான துணியால் துடைக்கவும் (சோள மாவு வேகவைப்பதற்காக இப்படி செய்ய வேண்டும்). இப்போது, மீண்டும் அரை நிமிடம் கழித்து ரொட்டியை புரட்டி போட்டு இருபுறமும் மெதுவாக சுட்டு எடுங்கள்.
  • ரொட்டி மீது சிறிதளவு நெய் தடவி எடுத்து வைத்தால் சத்தான சோள ரொட்டி ரெடி!

[குறிப்பு: அதிக தீயில் சுடும்போது, சோள ரொட்டி சீக்கிரமாக நிறம் மாறும் ஆனால் உள்ளே உள்ள மாவு வேகாது. அதனால் பொறுமையாக சுட வேண்டும்]

டிப்ஸ்: இந்த ரொட்டியை காற்றுபுகாத டப்பாவில் வைப்பதால், ஒரு வாரம் வரை கூட கெடாமல் சேமித்து வைக்கலாம். இந்த ஜோவர் ரொட்டிக்கு வேர்க்கடலை சட்னி, சாம்பார், கொண்டைக்கடலை குருமா சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

இதையும் படிங்க: இனி சிக்கன் எடுத்தால் ஹைதராபாத் ஸ்டைல் ​​'க்ரீன் சிக்கன் கறி' செய்து பாருங்கள்..செம ருசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.