தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி பான் இந்தியா அளவில் 'புஷ்பா 2' திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது. புஷ்பா படத்தில் மிரட்டல் லுக்கில் நடித்துள்ள அல்லு அர்ஜுனின் நடிப்பு ஒருபுறம் ரசிகர்களை ஆரவாரத்தில் ஈடுபடவைத்துள்ள நிலையில், மறுபுறம் அல்லு அர்ஜூனின் கச்சிதமான உடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
படத்தில் அல்லு அர்ஜுன் தோன்றும் காட்சிகளும், அவரது மின்னல் வேக நடனமும், உடலமைப்பும் கம்பீரமாக உள்ளது என்ற கமெண்டுகள் இணையதளத்தில் வைரலாகி உள்ளது. 42 வயதான அல்லு அர்ஜீன், இந்த வயதிலும் உடலை எப்படி கட்டுமஸ்தாக வைத்திருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், அல்லு அர்ஜுனின் டயட் ரகசியம் மற்றும் உடற்பயிற்சி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..
மார்னிங் வொர்க் அவுட்: பல படங்களில் சிக்ஸ் பேக் வைத்து நடித்து வரும் அல்லு அர்ஜுன், காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்ய தவருவதே இல்லையாம். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், ஆற்றல்களை தக்க வைக்கவும் உடற்பயிற்சியுடன் நாளை தொடங்குகிறார். தினந்தோறும் 45 நிமிடம் டிரெட்மில்லில் ஓடுவது, சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சியில் தன்னை கட்டாயம் ஈடுபடுத்தி கொள்வாராம்.
முட்டை: அதை தொடர்ந்து, காலை உணவாக அதிக புரதச் சத்துள்ள உணவை எடுத்துக்கொள்கிறார். அல்லு அர்ஜுனின் டயட் உணவில் கட்டாயம் முட்டைகள் இருக்குமாம். காலை உணவை தொடர்ந்து, நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்கிறார். தினசரி உணவில் முட்டைகளை சேர்த்துக்கொள்வது, தசையை மேம்படுத்தவும், பசி எடுக்காமல் நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
இவர், கார்போஹைட்ரேட் உணவுகளை பெரிதாக விரும்புவது இல்லை என தெரிய வந்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர், வயிறு பெரிதாக வேண்டும் என்றால் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட வேண்டும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 70 வயதிலும் ஃபேஷனில் டஃப் கொடுக்கும் உலக நாயகன்..கமலின் 7 மிரட்டல் லுக் இதோ!
க்ரில்டு சிக்கனும் காய்கறிகளும்: மதிய உணவிற்கு, அல்லு அர்ஜுன் நிறைய புரதம் கொண்ட சமச்சீரான உணவை விரும்புகிறார். குறிப்பாக, புரதம் அதிகமுள்ள க்ரில்டு சிக்கன் எடுத்துக்கொள்வாராம். அதனுடன் வேகவைத்த காய்கறிகள், சாலடுகள் நிலையானதாக இருக்கிறது. காய்கறிகளில், ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமானத்திற்கு உதவுவதுடன் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஜூஸ்: கூடுதலாக ஒரு கிளாஸ் ஜூஸ் மதிய உணவுடன் குடிக்க விரும்புவாராம். பழச்சாற்றில் உள்ள இயற்கையான இனிப்புகள், வைட்டமின்கள் உடலை புத்துணர்ச்சியாகவும் நீரேற்றமாக வைத்திருக்க உதவியாக இருக்கும். நாள் முழுவதும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த இரவு உணவு: செரிமானத்தை சீராக வைக்கவும், நிம்மதியான இரவு தூக்கத்திற்கும் நார்ச்சத்து நிறைந்த இரவு உணவை எடுத்துக்கொள்கிறார். பீன்ஸ், கார்ன், பிரவுன் ரைஸ், சாலட் என அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி நிறைந்த உணவை எடுத்துக்கொள்கிறார். முக்கியமாக, Early Dinner எனப்படும், இரவு உணவை 6 முதல் 7 மணிக்குள் அல்லு அர்ஜுன் முடித்துக்கொள்வாராம்.
இதையும் படிங்க:
'நோ மேக்கப்..நோ கிளாமர்'..திரையில் விதிகளை உடைத்து முன்னணி வகிக்கும் சாய் பல்லவி!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.