ETV Bharat / health

டோக்கியோவுக்கு அப்புறம் சென்னைல தான் இருக்கு! வாக்கிங் போங்க சார்.. லைஃப் நல்லா இருக்கும்! - Health Walk - HEALTH WALK

Health Walk: தொடர்ந்து, உடலைச் சுறுசுறுப்பாக வைப்பதற்காகவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும். தமிழ்நாட்டில் மக்களிடையே நடைப்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற திட்டத்தின் கீழ் ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நடைப்பயிற்சி (கோப்புப் படம்)
நடைப்பயிற்சி (கோப்புப் படம்) (Credits - Getty images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 9:17 PM IST

சென்னை: உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் மரணங்களில் 74 சதவீதம் Noncommunicable diseases எனப்படும் தொற்றா நோய்களால் நிகழ்கின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் தரவு. "ஒரு மனிதன் தினமும் 30 நிமிடம் நடந்தால் தொற்றா நோய்கள் என கூறப்படும் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறையும்" என்கிறார் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் செல்வவிநாயகம்.

இயக்குனர் செல்வவிநாயகம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 150-300 நிமிடங்கள், மிதமான முதல் தீவிரமான உடற்பயிற்சி அல்லது 75-150 நிமிடம் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சி உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு தொடர்பான பிரச்னைகளில் 27 சதவீதமும், இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் 30 சதவீதம் குறைக்க உதவியாக இருக்கும்.

தமிழ்நாடு அரசில் மருத்துவத் துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன், மாரத்தான் பந்தயங்களில் ஈடுபாடு கொண்டவராக இருக்கும் நிலையில், உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 64 வயதான மா.சுப்பிரமணியன் இது வரையிலும் 150 மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று ஓடியுள்ளார். India Book of records மற்றும் Asia Book of recordsல் இவரது சாதனைகள் இடம் பெற்றுள்ளன.

தனது ஃப்ட்னஸ் குறித்து பேசிய அமைச்சர், "2004ஆம் ஆண்டு மோசமான கார் விபத்தில் சிக்கி காலிலும், தலையிலும் காயமடைந்தேன். காலில் 6 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மறுநாள் பத்திரிகைகளில் மா.சுப்பிரமணியன் கவலைக்கிடம் என செய்தி வெளியிட்டார்கள். இதோடு 25 ஆண்டு காலமாக சர்க்கரை நோயும் இருக்கும் நான், இன்று எழுந்து நடந்ததோடு மட்டுமின்றி, ஓட்டப் பந்தயங்களிலும் என்னால் கலந்து கொள்ள முடிகிறது" என கூறினார்.

இளைஞர்களுக்கு உடற்பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படுத்தும் அமைச்சரின் முன்னெடுப்புடன் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் Walk way எனப்படும் நடைப்பயிற்சி பாதைகள் "நடப்போம் நலம்பெறுவோம்" திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முதன்மையானதாக பெசன்ட் நகரில் இருக்கும் 8 கிலோ மீட்டர் நீள பாதை உள்ளது. இந்த சாலையில் காலை 5 மணி முதல் 8 மணி வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படும்.

தனித்துவமான இந்த பாதையில் அண்மையில் சென்னை வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி மா.சுப்பிரமணியனுடன் இணைந்து ஓட்டப் பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் டோக்கியோ நகரில் இருக்கும் 8 கிலோ மீட்டர் நீள நடைப்பயிற்சி பாதை தன்னை ஈர்த்ததால், அது போன்ற ஒரு மாதிரியை சென்னையில் உருவாக்க முடிந்ததாகக் கூறும் மா.சுப்பிரமணியன், உலகிலேயே டோக்கியோவுக்குப் பின் சென்னையில் தான் இத்தகைய நடைப்பயிற்சிப் பாதை உள்ளது என கூறுகிறார்.

தமிழகத்தில் தொற்றா நோய்களின் அதிகரிப்பைத் தடுப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், முதலில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தைத் தொடங்கி, வீடு வீடாகச் சென்று நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

38 வருவாய் மாவட்டங்களிலும்: நவம்பர் 4 ஆம் தேதி, நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை 38 வருவாய் மாவட்டத்திலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும், ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த திட்டத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும். இந்தத் திட்டம் தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய்களின் தாக்கத்தை எதிர்காலங்களில் குறைக்கும் என பொதுச் சுகாதாரத்துறை குறிப்பிடுகிறது.

பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, “ தொற்றா நோய்கள் பாதிப்புகளை செலவில்லாமல் குறைப்பதற்கான முறைகளில் ஒன்றுத் தான் ஹெல்த் வாக் உடற்பயிற்சி. அதற்கு உண்டான நடைபாதைகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கியுள்ளோம். இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இதுபோன்ற நடைப்பாதையை உருவாக்கியுள்ளோம். இதன் நோக்கம் ஒரு மனிதன் தினமும் 30 நிமிடம் நடந்தால் தொற்றா நோய்கள் என கூறப்படும் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.

உங்களின் வேகத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் நடந்தால் உடல் உறுப்புகள் தானக செயல்பாட்டிற்கு வந்துவிடும். நடப்பதும் உடற்பயிற்சி செய்வதும், தொற்றா நோய்கள் வருவதை தடுப்பதற்கும், வந்த பின்னர் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ளவும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தேவைப்படுபவர்கள் சிறுநீர், ரத்தப்பரிசோதனையும் செய்துக்கொள்ளலாம். தினமும் 100 முதல் 500 பேர் வரையில் பயிற்சி செய்கின்றனர். மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து ஹெல்த் வாக் உடற்பயிற்சியை மேற்கொள்ள துவங்க வேண்டும்” என்று செல்வவிநாயகம் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: உடல் சோர்வு ஏற்படுகிறதா? இதுதான் காரணமா? அவசியம் Aplastic Anemia பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.