ETV Bharat / health

சென்னையில் ஆட்டம் காட்டும் 'மெட்ராஸ் ஐ'..வந்தால் என்ன செய்வது? மருத்துவர் விளக்கம்! - MADRAS EYE INFECTION

'மெட்ராஸ் ஐ' அறிகுறிகள் என்ன? அதை தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன? வந்தால் என்ன செய்வது? போன்ற கேள்விகளுக்கு டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண்புரை அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். திரிவேணி கூறும் பதிலை பார்ப்போம்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் திரிவேணி
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் திரிவேணி (Credits - ETVBharat Tamil Nadu)
author img

By ETV Bharat Health Team

Published : Nov 8, 2024, 5:07 PM IST

சென்னை: 'மெட்ராஸ் ஐ' என்று பிரபலமாக அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி சென்னையில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. அதுவும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் மத்தியில் இது வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலம் முடிவுக்கு வரும்போது கண் வெண்படல அழற்சி பாதிப்பு நேர்வுகள் சற்றே மிதமான அளவு அதிகரிக்கும்.

இந்த ஆண்டு சென்னை மாநகரில் மழைப்பொழிவு காலம் நீடித்திருப்பது மெட்ராஸ் ஐ பாதிப்பு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது என்கிறார் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பொது கண் மருத்துவவியலின் முதுநிலை ஆலோசகரும் மற்றும் கண்புரை அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். திரிவேணி.

மெட்ராஸ் ஐ ஏன் பரவுகிறது?: கண் வெண்படல அழற்சி அல்லது மெட்ராஸ் ஐ என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது. கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண்படல அழற்சி பரவுகிறது.

பாதிக்கப்பட்டவருடன் ஒருவர் நெருங்கி பழகும் போது, தொற்றுப் பரவக்கூடிய வைரஸ் அல்லது பாக்டீரியாவை கண் சுரப்போடு தொடர்பு கொள்ளக்கூடிய வேறொரு நபருக்கு கடத்த வாய்ப்புள்ளது. ஆனால், ஒவ்வாமையினால் ஏற்படும் கண் வெண்படல அழற்சி மற்றும் வேதிப்பொருட்கள் அல்லது எரிச்சலூட்டிகளினால் வரக்கூடிய கண் அழற்சி ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்குப் பரவுவதில்லை.

அறிகுறிகள் எப்படி இருக்கும்?:

  • கண் எரிச்சல்
  • கண்ணில் நீர் வடிதல்
  • கண் சிவத்தல்
  • வெளிச்சத்தைப் பார்க்க்கும் போது கூச்சம்
  • கண்ணிலிருந்து அதிகப்படியான அழுக்கு வெளியேற்றம்
  • தூங்கி எழுந்ததும் கண்ணை திறக்க முடியாத சூழல்

பார்வை பாதிக்குமா?: கண்ணின் கருப்பு நிற படலத்தின் மீதான அடுக்கான கருவிழியில் தொற்று இருக்குமானால், அதன் காரணமாக மங்கலான பார்வை ஏற்படக்கூடும். தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட இந்த வைரல் தொற்று, சில நோயாளிகள் மத்தியில் கண் வீக்கம் மற்றும் அழற்சியை ஏற்படுத்துகிறது. இப்பாதிப்புகள் குணமாவதற்கு அவர்களுக்கு நீண்டகாலம் எடுக்கிறது.

கண் வெண்படல அழற்சி என்பது, பொதுவாக ஒரு சிறிய கண் தொற்றாக இருக்கிறபோதிலும் அதை சரியாக பரிசோதனையில் உறுதிசெய்து உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால் அதிக தீவிரமான பிரச்சனையாக அது மாறக்கூடும்.

சுயமருத்துவம் ஆபத்து: பக்கத்திலிலுள்ள மருந்து கடையிலிருந்து ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை மெட்ராஸ் ஐ பிரச்சனைக்காக வாங்கி பயன்படுத்திப் பார்த்துவிட்டு பல நோயாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகின்றனர். சுயமாக மருந்துகளைப் பயன்படுத்துவதையும் ஓடிசி மருந்து என அழைக்கப்படும் கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிப்பதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: உங்கள் குழந்தைக்கு கண் பார்வை பிரச்சினை இருக்கிறதா?.. எப்படி கண்டறிவது?

உரிய பரிசோதனை மற்றும் நோய் உறுதி செயல்பாட்டிற்குப் பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏறக்குறைய 90% கண் வெண்படல அழற்சிகள் அடினோவைரஸ் என்பதனால் ஏற்படுகிறது.

தற்காப்பது எப்படி?: மெட்ராஸ் ஐ மிக அதிகமாகவும், வேகமாகவும் பரவக்கூடிய ஒரு தொற்றாகும். டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற தனிப்பட்ட பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு இது எளிதாகப் பரவக்கூடியது. ஆகவே, இத்தொற்று பாதிப்புள்ள நபரை தனிமைப்படுத்துதல் முக்கியமானது.

இக்கண் தொற்றுள்ள நோயாளிகள், அவர்களது கண்களிலிருந்து வரும் திரவ வெளியேற்றத்தை துடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் அவ்வாறு பயன்படுத்திய நேப்கின்களை உடனடியாக பத்திரமாக அகற்றிவிட வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ் அணியலாமா?: தொற்று ஏற்படும்போது பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு அவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணியவேண்டும். வழக்கமாக பயன்படுத்துகின்ற, திரும்பத்திரும்ப பயன்படுத்தக்கூடிய கைக்குட்டைகளை இந்நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது. தங்களது கைகளை இவர்கள் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் தொற்றுப் பரவாமல் தடுக்க, தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருட்களை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

பள்ளி மாணவர்கள் கவனம்: பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற அடைபட்ட அமைவிடச் சூழல்களில் கண் வெண்படல அழற்சி வேகமாக பரவக்கூடியது என்பதால், கண்களிலிருந்து அழற்சியின் காரணமாக தண்ணீர் போன்ற திரவச்சுரப்பு முற்றிலுமாக நின்றுவிடும் வரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே தனித்திருப்பது நல்லது.

இதையும் படிங்க:

கண் தானம் இவர்கள் எல்லாம் செய்யக்கூடாதா?...பரவும் கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி!

PresVu Eye Drops: 15 நிமிடத்தில் நல்ல பார்வைத் திறன் - சாதனை கண் மருந்தும், தொடர் சர்ச்சைகளும்!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.