சென்னை: கோடை வெப்பமும், அனல் காற்றும் வாட்டி வதைத்து வரும் நிலையில், சூடு தொடர்பான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை உட்கொள்வது அவசியம். அது மட்டும் இன்றி, இந்த பழய சோறு குடல் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைகிறது என விளக்கியுள்ளார் இரைப்பை, குடல்துறை பேராசிரியர் மருத்துவர் ஜஷ்வந்த்
அந்த வகையில் உடலுக்குக் குளிர்ச்சியும், ஆரோக்கியமும், நோய்களில் இருந்து தீர்வும் தரும் பழைய சோறு சிறந்த தேர்வு. இந்த பழைய சோறு எப்படி தயார் செய்யலாம். அதை எப்படி உட்கொண்டால் என்ன பலன் தரும் உள்ளிட்டவைகள் குறித்துப் பார்க்கலாம்.
பழைய சோறு பொதுவாக இரவு மீந்துபோன சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, காலையில் அதில் தயிர் ஊற்றிக் குடிப்பார்கள். ஆனால், நீங்கள் பழைய சோற்றை அடுத்த நாள் காலைக்கான உணவு என்ற அடிப்படையிலேயே மெனக்கெட்டு தயார் செய்யுங்கள். பொதுவாக இன்றைய சூழலில் பலர் தங்கள் வீடுகளில் ப்ரஷர் குக்கரில் தான் உணவு சமைக்கிறார்கள்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்.. பகல் நேரங்களில் வெளியில் செல்வோருக்கு சுகாதாரத்துறையின் அறிவுரைகள்! - How To Protect Heat Stroke
செய்முறை: பழைய சோற்றுக்கு நீங்கள் அரிசியைக் குக்கரில் வேக வைக்கக்கூடாது. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அரிசி போட்டு பதத்திற்கு வேக வைத்து வடிக்க வேண்டும். தண்ணீர் வடிந்து, சோற்றின் சூடு நன்றாக ஆறிய பிறகு, அந்த சோற்றை எடுத்து ஒரு மண் பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி, காட்டன் துணியில் தண்ணீர் நனைத்து பானையை இருக்கக் கட்டி வைக்க வேண்டும்.
காலையில் அந்த சோற்றை எடுத்து அதில் தேவைக்கு ஏற்ப உப்பு, சிறிதளவு சீரகம், கருவேப்பிலை நறுக்கியது, மற்றும் சுத்தமான பசும்பால் தயிர் சேர்த்து, கையால் நன்றாகப் பிசைந்து குடிக்க ஆரம்பிக்கலாம். அதனுடன், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், மாங்காய் துவையல், பிரண்டை துவையல், கருவாடு உள்ளிட்ட சைடு டிஜ்களை தயார் செய்து உட்கொள்ளலாம்.
இப்படி உட்கொள்ளும்போது நல்ல பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்று சேறும், உடலுக்குக் குளுமை ஏற்படுத்தும், உடலின் அகம் மட்டும் இன்றி வெளித் தோற்றமும் நீரேற்றத்துடன் காணப்படும். எந்த காரணத்தைக் கொண்டும் பழைய சோற்றைக் குளிர் சாதன பெட்டியில் எடுத்து வைத்து அதை உட்கொள்ளக் கூடாது. அதனால் உங்களுக்கு எவ்வித பயனும் இல்லை.
இதையும் படிங்க: காத்திருப்பு அழகா? அவஸ்தையா? ஆய்வு கூறுவது என்ன? - Waiting Causes Anxiety Mood Changes