ETV Bharat / health

world brain day 2024: மூளை ஆரோக்கியம் ஏன் முக்கியம், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? - TIPS TO KEEP YOUR BRAIN HEALTHY - TIPS TO KEEP YOUR BRAIN HEALTHY

TIPS TO KEEP YOUR BRAIN HEALTHY: மூளை ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் அடித்தளமாக இருக்கிறது. அப்படி, உங்கள் மூளையை சிறந்த நிலையில் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...

மனித மூளை - சித்தரிப்புப் படம்
மனித மூளை - சித்தரிப்புப் படம் (CREDIT - GETTY IMAGES)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 3:15 PM IST

சென்னை: ஒன்றரை கிலோ எடை கொண்ட மூளை தான் நமது ஆரோக்கியம், எண்ணங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள் என அனைத்திற்கு கன்ட்ரோல் ரூமாக செயல்படுகிறது. 'மெனி ப்ராப்ளம்ஸ் ஒன் சொலுஷன்' என்பதற்கேற்ப, மனதளவு மற்றும் உடலளவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு மூளையின் ஆரோக்கியம் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

சிக்னல்களை அனுப்புவதன் மூலம் நம் உடலை ஆபத்தில் இருந்து பாதுகாப்பது முதல் நம் உடல் சரியாக செயல்படுவதற்கு உதவுவது வரை வேலை செய்வதை நிறுத்தாத ஒரு உறுப்பு மூளை தான். எனவே, ஒருவர் தங்கள் மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த காரணத்திற்காகவே, 2013ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ம் தேதி உலக நரம்பியல் கூட்டமைப்பால் (WFN) உலக மூளை தினம் (world brain day) கொண்டாடப்படுகிறது.

மூளை ஆரோக்கியம் ஏன் முக்கியம்?: இந்தியாவில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பக்கவாதம், பார்கின்சன்,கை,கால் வலிப்பு,அல்சைமர், டிமென்ஷியா மற்றும் பல நரம்பியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஆய்வு. தி லான்செடின் மருத்துவ ஆய்வின் படி, தொற்றாத நரம்பியல் பிரச்சனைகள் (non-communicable neurological disorders) 1990ல் 4 சதவீதத்திலிருந்து 2019ல் 8.2 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது.

அதே போல, நரம்பியலில் ஏற்படும் காயங்கள் (injury-related neurological disorders ) 0.2 சதவீதத்திருந்து 0.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு மாறாக, அதே காலகட்டத்தில் நரம்பு தொற்று பிரச்சனைகள் (communicable neurological disorders) 4.1 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், 2019ம் ஆண்டில், 37.9 %-பக்கவாதம், 17.5% - தலைவலி பிரச்சனைகள், 11.3 %-கை-கால் வலிப்பு, 5.7% - வாதம், 5.3% - மூளை விக்கம் போன்ற நரம்பியல் பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

WHO-வின் முன்னெடுப்புகள்: உலக சுகாதார அமைப்பு (WHO) 2031ன் இலக்காக, நரம்பியல் பிரச்சனைகளை கலைவதற்கு புதிய செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது. உலகளவில் ஏற்படும் உடல்நலக்குறைவு மற்றும் இயலாமைக்கு நரம்பியல் பிரச்சனைகள் முக்கிய காரணமாக அமைகிறது என்கிறது WHO. குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் இந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சைகள் போதுமானதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

நரம்பியல் கோளாறுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குறைபாடுகள் உள்ளவர்கள் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறுவதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் பலர் பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களை அனுபவிக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்களையும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

சிகிச்சை சாத்தியமா?: பெரும்பாலான நரம்பியல் பிரச்சனைகளை குணப்படுத்த முடியாது என்றாலும், வாழ்வில் சிறிய மாற்றத்தை கொண்டு வருவதால் பழைய நிலைமையை மீட்டெடுக்க முடியும். வாரத்திற்கு 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உணர்ச்சித் திறன்களை மேம்படுத்தி கவலை, மனச்சோர்வு மற்றும் டிமென்ஷியாவை குறைக்க உதவுகிறது.

7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், புகைப்பிடிப்பதை தவிர்ப்பது, சமூக வாழ்க்கையை மேம்படுத்துவது, ஆரோக்கியமான உணவுமுறை, தோட்டகலை மூலம் இயற்கையோடு வாழ்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் நிலைமையை சீர் செய்யலாம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தாவரங்களில் இருந்து தாய்ப்பாலா? - கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு! - Breast Milk From Plants

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.