ETV Bharat / health

சுவரில் கிறுக்கும் குழந்தைகள்.. பெற்றோர் அதட்ட வேண்டாம்: UNICEF வழிகாட்டுதல்.! - Importance of children playing - IMPORTANCE OF CHILDREN PLAYING

குழந்தைகளை முழுமையாக விளையாட அனுமதிப்பது மற்றும் அவர்களோடு சேர்ந்து விளையாடுவது போன்ற பெற்றோரின் செயல், அந்த குழந்தையின் அறிவாற்றல் ஊக்குவித்தலுக்கு ஆதாரமாக இருக்கும் என, யூனிசெஃப் பேரன்டிங் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தையுடன் விளையாடும் பெற்றோர்: கோப்புப்படம்
குழந்தையுடன் விளையாடும் பெற்றோர்: கோப்புப்படம் (credit: Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 7:03 PM IST

சென்னை: குழந்தைகள் விளையாடுவது என்பது வெறும் மகிழ்ச்சிக்காக மட்டும் அல்ல, அவர்களின் அறிவை வளர்க்கும் செயல்களில் விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது. ஒரு குழந்தை பிறந்து முதல் 3 ஆண்டுகளில் அதாவது ஒரு வயது முதல் 3 வயது வரை குழந்தைகளின் மூளை திறன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

இந்த நேரத்தில் அவர்களின் அறிவு திறனை வளர்க்க பெற்றோர் அதிகம் பாடுபட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் இங்கு வேடிக்கையான விஷயம். குழந்தைகளை விளையாட அனுமதித்தல் மற்றும் அவர்களோடு சேர்ந்து விளையாடுதல் போன்ற செயல்களை மேற்கொண்டாலே போதும் அவர்கள் அறிவாற்றல் பல மடங்கு வளர்ச்சி பெறும் என யூனிசெஃப் பேரன்டிங் வழிகாட்டுதல் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் சிறிய விளையாட்டுகளை மேற்கொள்வதை பார்க்கும்போது அது மேலோட்டமாக தெரியலாம் எனவும், ஆனால் அது அவர்களின் வாழ்க்கை திறன், சிக்கல்களை சமாளிப்பது, புதிய சூழலை எளிதாக கையாளுவது உள்ளிட்ட பல்வேறு ஆற்றலை கற்றுக்கொடுக்கும்.

குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி இருக்க வேண்டும்: உங்கள் குழந்தைக்கு முதல் ஆசிரியரும் நீங்கள் தான், முதல் நண்பரும் நீங்கள்தான். அவர்களோடு விளையாடும் நண்பராக இருந்துகொண்டே ஆசிரியர்போல் பாடமும் கற்றுக்கொடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என யூனிசெஃப் அறிவுறுத்துகிறது.

என்னென்ன விளையாட்டுகளை விளையாடலாம்? முன்பெல்லாம் கிராமப்புற வீடுகளில் கண்ணாமூச்சி, நடைவண்டி, பொம்மை விளையாட்டு, கிலு கிலுப்பி உள்ளிட்ட ஓசை எழுப்பும் வகையில் உள்ளவைகளை வைத்து விளையாடுதல் உள்ளிட்ட பல விளையாட்டுகளை குழந்தைகளை விளையாட வைப்பார்கள்.

இப்போது பில்டிங் செட்டுகளை வைத்து கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் பூர்வமான விளையாட்டுகள் வந்துவிட்டன. இவற்றை முழுமையாக விளையாட குழந்தைகளை அனுமதிப்பதுடன் பெற்றோரும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும். இதனால், அவர்களின் கேள்வி திறன், சிந்தனை திறன், ஆற்றல் உள்ளிட்டவை சிறப்பாக வளர்ச்சி பெறும்.

குழந்தைகளின் விளையாட்டு குறும்பு அல்ல: வீட்டின் சுவர்களிலும், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் குழந்தைகளின் கிறுக்கல்கள் இடம்பெற்றிருக்கும். அது அவர்களின் கருத்தையும், எண்ணத்தையும் வெளிப்படுத்த அவர்கள் முயற்சிக்கும் ஒரு செயல் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் அதை முழுமையாக அனுமதித்து ஆதரிக்கவும் வேண்டும். அது மட்டும் இன்றி உங்கள் குழந்தை வரைந்திருக்கும் கிறுக்கல் போன்ற ஓவியம் குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள். அது அவர்களின் ஆலோசனை மற்றும் கருத்தின் வெளிப்பாட்டை ஊக்குவிக்கும்.

இதையும் படிங்க: குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் நல்வழிப்படுத்த முடியுமா? UNICEF சொல்லும் அற்புத வழிகள்! - Gentle PARENTING TIPS

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.