- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: அக்னி வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், சூடு காரணமாக பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளில் கூட ஈடுபட முடியாமல் அல்லாடி வருகின்றனர். சாதாரண நாட்களில் கூட வெயில் அதிகமாக இருந்த நிலையில் தற்போது மேலும் அதீத வெக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த சூழலில், அதீத சூடு காரணமாக பலருக்கும் Heat stroke எனும் வெக்கை வாதம் வர வாய்ப்பு உள்ளதாக, எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மருத்துவர் வி.பி சந்திரசேகரன் கூறியுள்ளார். இந்த Heat stroke என்றால் என்ன? இதை எப்படி கட்டுப்படுத்துவது? யார் யாருக்கு இந்த Heat stroke வரும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் தகவல் அளித்துள்ளார்.
வெக்கை வாதம் (Heat stroke ) என்றால் என்ன?: பொதுவாக கோடை காலம் என்றால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்வது சகஜம். ஆனால் இந்த காலகட்டத்தில் அதீத வெயில் கொளுத்தி எடுப்பதால் பூமி முழுவதும் அனல் தகிக்கும் கதகதப்பில் இருக்கின்றன, இங்கு வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்கள் அனைத்தும் இந்த வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும். இதனால் ஏற்படும் உடல் சூடு தொடர்ந்து அதிகரிக்கும்போது வெக்கை வாதம் ஏற்படுகிறது. இந்த வெக்கை வாதம் ஏற்படும்போது, பக்கவாதம், மயக்கம் சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என தெரிவிக்கிறார் மருத்துவர் வி.பி சந்திரசேகரன்.
யார் யாருக்கு இந்த வெக்கை வாதம் (Heat stroke) ஏற்படும்?: வெக்கை வாதத்திற்கு முதியவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனக்கூறிய மருத்துவர் வி.பி சந்திரசேகரன், இளம் பருவத்தினருக்கும் இந்த வெக்கை வாதம் ஏற்பட கனிசமான அளவு வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார். இளம் பருவத்தினருக்கு வியற்வை வெளியேறு உடல் சூடு தனிய அதிகம் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், முதியவர்களுக்கு இயல்பாகவே அந்த தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர்களின் உடல் சூடு தனிவதில் அதீதம் சிக்கல் இருக்கின்றன. இதன் காரணமாக அவர்களுக்கு வெக்கை வாதம் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது எனவும் இளம் பருவத்தினரும் உடல் சூடு ஆக விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் வி.பி சந்திரசேகரன் அறிவுறுத்தியுள்ளார்.
உடல் சூடாகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?: வெக்கை காரணமாக உடல் தானாகவே சூடாகிக்கொண்டே இருக்கும். இதை குறைப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறதோ அவற்றை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.
- காலை மாலை என இரு வேளையும் குளிக்க வேண்டும்
- தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும்
- நீராகாரம் மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்
- பழச்சாறுகள் மற்றும் இளநீர், மோர் உள்ளிட்டவைகள் சிறந்தது
- வெளிர் நிற தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்
- ஜீன்ஸ், டீ சர்ட், பட்டுப்புடவைகளை தவிர்ப்பது நல்லது
- முடிந்தவரை வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும்
- ஏசி உள்ளிட்டவைகளின் ஆதரவுடன் இருப்பது சிறந்தது
தவிர்க்க முடியாத சூழலில் வெளியே சென்றால் கையில் என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்?
- ஓ.ஆர்.எஸ் கரைச்சல்
- தண்ணீர் பாட்டில்
- குடை
- கைக்குட்டை
- கூலிங் கிளாஸ்
உள்ளிட்டவைகளை கட்டாயம் கையில் வைத்திருங்கள்.
தவிர்க்க முடியாத சூழலில் வெளியே சென்றால் என்னென்ன வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்?
- முடிந்தவரை வெளியே தனியாக செல்வதை தவிருங்கள்
- இரு சக்கர வாகனத்தில் செல்வதை தவிருங்கள்
- பேருந்து, கார், ஆட்டோ உள்ளிட்டவற்றில் பயணம் மேற்கொள்வது நல்லது
- முகம் மற்றும் வெயில் படும் இடங்களில் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்
- முடிந்தவரை காலை அல்லது மாலை நேரங்களில் வெளியே செல்வது நல்லது
- வெயில் நேரத்தில் வெளியே வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்
வெயிலில் சென்று மயங்கியவருக்கு எப்படி முதலுதவி வழங்க வேண்டும்?: ஒரு நபர் வெளியே சென்று வெயில் காரணமாக மயங்கினார் என்றால் அது Heat stroke-ன் அறிகுறியாக இருக்கலாம். அந்த நபரை உடனடியாக நிழலான பகுதிக்கு மாற்றி முகத்தில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
பிறகு, ஒரு காட்டன் துணியை குளிர்ந்த தண்ணீரில் முக்கி அவரின் தலை மற்றும் உடல் பாகங்களில் துடைத்து உடல் சூட்டை குறைக்க வேண்டும். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.
இதையும் படிங்க: Settings-ல போயி கொஞ்சம் Brightness குறைக்க முடியுமா தெய்வமே? மீம் கிரியேட்டர்கள் சூரியனிடம் கோரிக்கை! - Heat Wave Funny Memes