டெல்லி: உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்ததை அடுத்து, இந்தியாவில் இதுவரையில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நோயை தடுப்பதற்கான தயார்நிலை குறித்து மத்திய பொது சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு செய்தார்.
குரங்கு அம்மை நோய் மற்ற நாடுகளில் பரவியதை அடுத்து, ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), உலக சுகாதார நிறுவனம் (WHO), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டம் (NVBDCP), சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகியவற்றின் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதில், இந்தியாவில் இதுவரையில் குரங்கு காய்ச்சலால் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள சுகாதாரப் பிரிவுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறைச் செயலாளர் அபூர்வ சந்திரா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அறிகுறிகள்: தோல் அரிப்பு, 2-4 வாரம் தொடர் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு போன்றவை குரங்கு அம்மையின் அறிகுறிகளாகும். உலகளவில் 2022 முதல் குரங்கு அம்மை நோயால் இதுவரையில் 99 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 208 இறப்புகள் பதிவாகியுள்ளதாக WHO அறிவித்துள்ளது. 2022க்குப் பிறகு இந்தியாவில் மொத்தம் 30 வழக்குகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாட்டில் பாலில் சர்க்கரை சேர்க்கலாமா? குழந்தைகளின் வளர்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்! - SUGAR IN CHILDREN MILK