சென்னை: உலக அளவில் இந்தியாவில்தான் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதிலும், தமிழ் நாட்டில் அதிக அளவு உயிரிழப்புகள் நடப்பதாகவும், இதை கட்டுக்குள்கொண்டுவர 18 வயதுக்கு மேற்பட்டோர் தாங்களாக முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும் எனவும் அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் மருத்துவர் தவபழனி அழகப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று (ஜூன்,14)உலக ரத்தான தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த தானம் செய்த நபர்களை கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த மருத்துவர் தவபழனி அழகப்பன், விபத்துகளின் போது ஏற்படும் ரத்தப்போக்கின் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு அதிகளவில் ரத்தத்தானம் செய்ய உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுவாக மனித உடலில் 6 லிட்டர் வரை ரத்தம் உள்ள நிலையில், தானமாக வழங்கும்போது வெறும் 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படும் எனவும், இதனால் ரத்தம் தானம் செய்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அறிவுறுத்தினார்.
விபத்தின்போது ரத்தப்போக்கு: விபத்திற்கு உள்ளான நபருக்கு தொடை எலும்பு உடைதல், இடுப்பின் குறுக்கு எலும்பு உடைதல், தலையில் அடிபடுதல் உள்ளிட்ட நேரங்களில் அதீத ரத்தப்போக்கு இருக்கும். அந்த சூழலில் அவர்களுக்கு அந்த ரத்தப்போக்கை கட்டுக்குள் கொண்டுவருவதுடன், ரத்தம் உடலில் ஏற்றவும் வேண்டும். இல்லை என்றால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெற அதிகம் வாய்ப்புள் இருக்கிறது. மேலும், ரத்தம் வெளியேறுவது வெளியில் தெரிந்தால் சுத்தமான துணியால் இருக்கமாக அந்த இடத்தில் கட்டினால்போதுமானது.
விபத்து ஏற்பட்ட நபரை எப்படி கையான வேண்டும்: விபத்துக்கு உள்ளான நபரை ஆட்டோ அல்லது கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றும்போது அவசரம் வேண்டாம். மிகவும் நிதானமாக, பாதுகாப்பாக ஏற்ற வேண்டும். இல்லை என்றால், உடலின் உள் பாகத்தில் எங்கு ரத்தப்போக்கு நடைபெறுகிறது என்று தெரியாத சூழலில், அவசர அவசரமாக ஏற்றும்போது அந்த ரத்தப்போக்கு அதிகரிக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளன. மேலும், விபத்துக்குள்ளான நபரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்போது பொதுமக்களும் சரி, தனியார் அவசர ஊர்தி ஓட்டுநர்களும் சரி ரத்த வங்கி மற்றும் உடனடி அறுவை சிகிச்சைக்கான வசதி இருக்கும் மருத்துவமனைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: குறைந்து வரும் பார்வை திறன்... கண்புரை நோயாக இருக்கலாமா?: மருத்துவர் கூறுவது என்ன? - How to protect from cataracts