சென்னை: அத்திப்பழங்கள் சுவையான, அதேநேரம் சத்துக்கள் மிகுந்தவை ஆகும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை சரி செய்யும். இந்த அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து, காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதன் பலன்கள் இரட்டிப்பாகும் என்கின்றனர் நிபுணர்கள். அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால், அதில் கிடைக்கும் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் இரண்டு முக்கிய ஊட்டச்சத்துகளான ஜிங்க் மற்றும் வைட்டமின் சி அத்திப்பழத்தில் ஏராளமாக உள்ளது. அதை நீரில் ஊற வைத்து அடிக்கடி உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் சி சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தை பளப்பளப்பாக வைக்க உதவுகின்றன. எடையைக் குறைக்க உதவும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், பசியைக் குறைக்கும். இதனால் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
இதையும் படிங்க: தினமும் வெற்றிலை சாப்பிட்டால் இம்புட்டு நன்மைகளா..இத்தனை நாளா இது தெரியாம போச்சே! - Betel Leaves Benefits
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்: சீரான அளவில் அத்திப்பழங்களை உண்ணும் போது, அதில் உள்ள கிளைசெமிக் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கு உதவும்: தற்போது பெரும்பாலானோர் முடி உதிர்வு பிரச்னையை எதிர்கொள்கின்றனர். அவர்களின் பிரச்னையை அத்திப்பழம் தீர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். அத்திப்பழத்தில் உள்ள அதிகமான இரும்புச்சத்து முடி உதிர்வைக் குறைக்கும்.
செரிமானத்தை மேம்படுத்தும்: அத்திப்பழத்தில் உள்ள ஏராளமான நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்