ETV Bharat / health

தினசரி 1 ஷாட் பீட்ரூட் ஜூஸ் போதும்..இந்த பிரச்சனைகள் எல்லாம் ஓடிவிடும்! - TAKING BEETROOT JUICE EVERYDAY

உடல் எடையை குறைப்பது முதல் புற்றுநோய் செல்களை அழிப்பது வரை, தினசரி பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Health Team

Published : Nov 18, 2024, 1:13 PM IST

தினசரி காலை வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.

பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள்:

  • மெக்னீசியம்
  • பாஸ்பரஸ்
  • சோடியம்
  • பொட்டாசியம்
  • நைட்ரேட்
  • கால்சியம்
  • காப்பர்
  • செலினியம்
  • இரும்புச்சத்து
  • மாங்கனீசு

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

  • இரத்தசோகை குணமாகும்: ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான இரும்புச்சத்து, போலேட், வைட்டமின் 12 போன்ற புதிய இரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் பீட்ரூட்டில் நிறைந்துள்ளது. அதனால், அனீமியா போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தினசரி காலை வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இரத்த சோகை குணமாகும்.
  • கல்லீரல் சுத்தமாகும்: இதில் இருக்கக்கூடிய குளுதாதயோன் (Glutathione) எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட், கல்லீரல் செல்கள் பாதிப்படைவதை தடுப்பதோடு, புதிய செல்கள் உற்பத்திக்கும் உதவி செய்கிறது. அதுமட்டுமல்லாமல், கல்லீரலில் தங்கியிருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும். அதனால், கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட வாரம் இரு முறையாவது வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வரலாம்.
  • இரத்த ஓட்டம் சீராகும்: பீட்ரூட்டில் இருக்கக்கூடிய நைட்ரேட் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்த குழாய்களில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இரத்த அழுத்தமும் சீராக இருக்கும். அதிக மட்டும் குறைந்த இரத்த அழுத்ததால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர, பிபி போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.
  • உடல் நச்சுக்கள் வெளியேறும்: உடலில், நச்சுக்கள் அதிகமாவதால், சளி, காய்ச்சல் போன்ற பல நோய்கள் வருகின்றன. இந்த நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் பீட்ரூட்டிற்கு இருக்கிறது. இதில், இருக்கக்கூடிய பீட்டா லையனின் எனும் வேதிப்பொருள் உடல் நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக்கும். இதனால், நோய்கள் வருவது தடுக்கப்பட்டு, சுறுசுறுப்பாக இருக்கலாம்.
  • புற்றுநோய் வராமல் தடுக்கும்: பீட்ரூட்டில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடண்ட், உடலில் புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பதோடு, புற்றுநோய் வருவதற்கான காரணிகளை அழிக்கும்.
  • உடல் எடையை குறைக்கும்: பீட்ரூட்டில் இருக்ககூடிய நார்ச்சத்து, உடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவி செய்கிறது.

பீட்ரூட் ஜூஸ் செய்வது எப்படி?: பீட்ருட்டை தோல் உரித்து, கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் சிறு துண்டு இஞ்சை நறுக்கி வைக்கவும். இப்போது, ஒரு ப்ளெண்டர் அல்லது மிக்ஸி ஜாரில் பீட்ருட் மற்றும் இஞ்சி சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பின்னர், வடிகட்டி குடிக்கலாம்.

இதையும் படிங்க:

எடை இழப்பு முதல் முடி வளர்ச்சி வரை..தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்!

சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை ஆல் கிளியர் செய்யும் வாழைத்தண்டு..இப்படி எடுத்துக்கோங்க!

வெறும் வயிற்றில் சீரக தண்ணீரும் அதன் 7 பயன்களும் இதோ..!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.