ETV Bharat / entertainment

'மஞ்சள் வீரன்' திரைப்படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம் - இயக்குநர் திடீர் அறிவிப்பு! - Youtuber TTF vasan - YOUTUBER TTF VASAN

Youtuber TTF vasan: 'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார்.

'மஞ்சள் வீரன்' திரைப்படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம்
'மஞ்சள் வீரன்' திரைப்படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 1, 2024, 3:54 PM IST

சென்னை: யூடியூப் மூலமாக பிரபலமாகி, பைக் ரேசிங் ஈடுபட்டு, ட்ரெண்டிங்கில் இருப்பவர் டிடிஎஃப் வாசன். இவர் ‘மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்படுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை இயக்குநர் செல்அம் இயக்குவதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ’மஞ்சள் வீரன்’ திரைப்படத்திற்கான பூஜைகள் நடைபெற்று படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் ரசிகர்கள் ’மஞ்சள் வீரன்’ திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், மஞ்சள் வீரன் திரைப்படத்தின் இயக்குநர் செல்அம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ”டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்க இருந்த மஞ்சள் வீரன் திரைப்படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தின் 35 சதவிகித வேலைகள் முடிவடைந்த நிலையில் மற்ற கதாபாத்திரத்திற்கான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது என கூறினார்.

கதாநாயகனுக்கான படப்பிடிப்பு ஒரு சதவிதம் கூட நடைபெறாத நிலையில் டிடிஎஃப் வாசன் இந்த திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். டிடிஎஃப் வாசன் பல வேலைகளில் பிஸியாக இருப்பதால் இந்தத் திரைப்படத்திற்கு அவரால் நேரம் செலவிட முடியவில்லை எனவும், அதன் காரணமாக அந்த கதாபாத்திரத்தில் வேறொரு கதாநாயகனை தேர்வு செய்து அந்த படப்பிடிப்பை தொடர்வதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்த ’கோட்’... ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - GOAT OTT release date

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி குறித்து வருகிற அக்டோபர் 15ஆம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என மஞ்சள் வீரன் திரைப்படத்தின் இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். மேலும் டிடிஎஃப் வாசனுக்கும், தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அவரால் இந்த திரைப்படத்திற்கான நேரத்தை செலவிட முடியாமல் போனதே இந்த திரைப்படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதற்கு காரணம்” என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.