ETV Bharat / entertainment

யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ் எப்போ ரிலீஸ் தெரியுமா? - Chutney Sambar Web Series - CHUTNEY SAMBAR WEB SERIES

Chutney Sambar Web Series: யோகி பாபு, வாணி போஜன் ஆகியோர் நடித்து வரும் 'சட்னி - சாம்பார்' வெப் சீரிஸை வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது

சட்னி சாம்பார் வெப் சீரிஸ் போஸ்டர்
சட்னி சாம்பார் வெப் சீரிஸ் போஸ்டர் (Credits - Yogi Babu Instagram page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 11:42 AM IST

சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ராதாமோகனின் இயக்கத்தில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின், டிரெய்லரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபுவின் முதல் வெப் சீரிஸாக உருவாகியுள்ள இந்த சீரிஸ், வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது. 'சட்னி - சாம்பார்' முழுக்க முழுக்க குடும்பங்கள் சிரித்து ரசிக்கும், யூத்ஃபுல் எண்டர்டெய்னர் சீரிஸாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

'சட்னி-சாம்பார்' சீரிஸை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க, பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.

இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை, இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழில் நாயகனாக அறிமுகமாகும் கன்னட சூப்பர் ஸ்டார்.. மாஸுக்காக காத்திருக்கும் இரு மாநில ரசிகர்கள்! - Shivarajkumar in Kollywood

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.