ETV Bharat / entertainment

சூப்பர் ஹியூமனாக மிரட்டியுள்ள சத்யராஜ்?... வெப்பன் பட டிரெய்லர் வெளியீடு! - weapon movie trailer

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 9:47 AM IST

Weapon movie trailer: இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'வெப்பன்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

weapon movie team photo
வெப்பன் படக்குழு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
வெப்பன் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும் சத்யராஜ் (Video Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மில்லியன் ஸ்டுடியோ புரொடக்சன்ஸ், எம்.எஸ் மன்சூர் தயாரித்து இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் படம் 'வெப்பன்' (Weapon). இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், மைம் கோபி, நடிகை தான்யா ஹோப், இயக்குநர்கள் குகன் சென்னியப்பன், ஆர்.வி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், “திரையில் வீரத்தைக் காட்டுபவர் சூப்பர்மேன் அல்ல, தரையில் வீரத்தை காட்டுபவர்கள் தான் சூப்பர்மேன், சூப்பர் ஹீரோ. அப்படி என்னை பொறுத்தவரை தரையில் வீரத்தை காட்டிய தேசிய தலைவர் பிரபாகரன் தான் சூப்பர் மேன். அவர் தலைமையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை போர், சர்வதேச வல்லரசு நாடுகளின் தவறான புரிதல் மற்றும் மிகப்பெரிய சூழ்ச்சிகளால் ஒடுக்கப்பட்டுள்ளது என்பதைவிட பின்னடைவு என்றுதான் கூற வேண்டும்.

என்றைக்காவது ஒருநாள் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும், அது காலத்தின் கட்டாயம். ஏன் இன்றைக்கு இதை பேசுகிறேன் என்றால் இன்று மே 17, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த நாள்" என்று சத்யராஜ் கூறினார்.

மேலும் பேசிய அவர், "விஜயகாந்திற்கு எத்தனையோ நல்ல பாடல்கள் இருக்கு. ஆனால் 'வானத்தை போல மனம் படைத்த மன்னவனே' என்ற அழகான பாடலை கொடுத்தவர் என்னுடைய நண்பர் ஆர்.வி.உதயகுமார் தான். சினிமா இப்ப வேற மாதிரி போயிட்டு இருக்கு. அதற்கு குகன் போன்ற இயக்குநர்கள் வேண்டும்.

தமிழ் சினிமாக்கள் இன்று உலகம் முழுவதும் செல்ல காரணம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்கள் தான். சில படங்கள் நடிகர்களை வைத்து வெற்றி பெறும், சில படங்கள் கதைகளை வைத்து ஜெயிக்கும். இந்தப் படம் கிராபிக்ஸை வைத்து ஜெயிக்கும் டெக்னிக்கலாக வளரும்போது தான் உலக சினிமாக்களுடன் போட்டிப் போட முடியும். பாகுபலி கட்டப்பா கேரக்டர் கார்ட்டூனாக மாறிவிட்டது. ஒரு மனிதனின் குறைகளையும், நிறைகளையும் சொன்னால்தான் வளர முடியும். நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள்.

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் 75 சதவீதம் கதை. 25 சதவீதம் மேக்கிங். ஆனால் இப்போது கதை கேட்டு முடிவு செய்ய முடியாது, ஒரு கேரக்டர் கார்ட்டூனாக மாறிவிட்டால் அது காலத்தால் அழியாத கேரக்டர். அப்படி இந்த கேரக்டர் நன்றாக இருக்கும்” என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.

இதனைதொடர்ந்து பேசிய நடிகர் வசந்த் ரவி, “தரமணியில் இருந்து ஒரு பீல் இருந்து வருகிறது. அந்த மாதிரியான படம் 'வெப்பன்'. தமிழ் சினிமாவில் சூப்பர் ஹியூமன் கதையை பண்ணுவது சாதாரணமானதல்ல. இந்த படத்தின் டிரெய்லரை, இயக்குநர் நெல்சனிடம் காட்டியபோது, இந்த மாதிரி சூப்பர் ஹியூமன் கதையை ரொம்ப பாராட்டியதாக கூறியவர், ராக்கி படத்தில் பாரதிராஜா சாரிடமும், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் சாரிடமும் நடிக்கும்போது நிறைய கற்றுக் கொண்டேன். வெப்பன் எனக்கு ரொம்ப முக்கியமான படம். இந்த ஜார்னர் தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதியது”என்றார்.

பின்னர் பேசிய இயக்குநர் குகன் சென்னியப்பன், “நானும் சத்யராஜ் சாரின் ரசிகன். இயக்குநர் மணிவண்ணன் இருந்திருந்தால் அவரையும் இங்கு பார்த்திருப்போம். இந்த கதையை சொன்னால் சத்யராஜ் ஒத்துக் கொள்வாரா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அவர் ஒத்துக்கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் வேறு மாதிரியான சத்யராஜை பார்ப்பீர்கள். ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமாக நடித்திருக்கிறார். இயற்கை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படத்தில் கண்டிப்பாக சொல்லி இருக்கிறோம்.‌ சமுதாயத்துக்கு தேவையான பல விஷயங்களை பொழுதுபோக்கு கலந்த கதையில் சொல்லி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கேன்ஸ் திரைப்பட விழா 2024; மலையாள படமான 'வடக்கன்' சரித்திர அறிமுகம்! - Vadakkan Debut Cannes Film Festival

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.