ETV Bharat / entertainment

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'நேசிப்பாயா' பட டைட்டில் வீடியோ வெளியானது! - Nesippaya title video released - NESIPPAYA TITLE VIDEO RELEASED

Nesippaya: இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேசிப்பாயா பட டைட்டில் ஸ்கீரின்ஷாட்
நேசிப்பாயா பட டைட்டில் ஸ்கீரின்ஷாட் (credits - vishnu varadhan X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 8:09 PM IST

சென்னை: இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. இதில் சரத்குமார், குஷ்பு, அதிதி ஷங்கர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், இன்று (ஜூன் 25) இப்படத்திற்கு 'நேசிப்பாயா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் தலைப்பை அறிவித்துள்ளது. மேலும், படம் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் தலைப்பை வைத்து இப்படம் காதல் படமாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. மாஸ்டர் படம் கரோனா காலகட்டத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இயக்குநர் விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர். சமீபத்தில், இந்தியில் படம் இயக்கி வந்த விஷ்ணுவர்தன் தற்போது நேசிப்பாயா படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்த தடவை மிஸ் ஆகாது.. எமர்ஜென்சி ரிலீஸ் அப்டேட் வெளியிட்ட கங்கனா ரனாவத்! - EMERGENCY RELEASE DATE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.