ETV Bharat / entertainment

விஷ்ணு விஷால் - ராம்குமாரின் 3வது காம்போ; கொடைக்கானலில் துவங்கிய 3-ம் கட்ட படப்பிடிப்பு! - Vishnu Vishal Ramkumar combo

Actor Vishnu Vishal: இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vishnu Vishal Ramkumar combo
விஷ்ணு விஷால் - ராம்குமார் இணையும் படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 1:41 PM IST

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகவும் நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருந்த முண்டாசுப்பட்டி திரைப்படம், மூட நம்பிக்கைக்கு எதிராக நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விஷ்ணு விஷாலின் திரைப் பயணத்தில் ஒரு வெற்றிப் படமாகவும் முண்டாசுப்பட்டி அமைந்தது எனலாம்.

அதனைத் தொடர்ந்து, இந்த கூட்டணி ராட்சசன் படத்தில் மீண்டும் இணைந்தது. இந்த முறை த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட அந்த படம், இதுவரை வந்த த்ரில்லர் படங்களில் மிக முக்கியமான படமாக மாறியது. ரசிகர்களின் பேராதரவுடன் இன்று வரையிலும் பேசப்படும் படமாக உள்ளது, ராட்சசன். ஜிப்ரானின் இசை படத்தின் வெற்றிக்கு மேலும் உதவியது எனலாம். விஷ்ணு விஷால் திரை வாழ்வில் மிக முக்கியமான படமாக அந்தப் படமும் அமைந்தது.

தற்போது மூன்றாவது முறையாக இயக்குநர் ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. அதாவது, விஷ்ணு விஷாலின் 21வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது கொடைக்கானலில் மூன்றாவது கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால், அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் வேறு வேறு கதைக்களத்துடன் அமைந்த காரணத்தால், தற்போது இது எந்த மாதிரி படமாக உருவாகி வருகிறது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

இது குறித்து விஷ்ணு விஷால் தனது X தளத்தில், “ராம்குமார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளது. எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி படத்தை இயக்கிய செல்லா அய்யாவு படத்திலும், அருண்ராஜா காமராஜ் உடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் பறக்கச் செய்த மைம் கோபி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.