ETV Bharat / entertainment

"இனி பேனர் கட்டினா மட்டும் படம் ஓடப் போகுதா" என கிண்டல் செய்தனர்... விஜய் சேதுபதி வருத்தம்! - Maharaja success meet

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 11:23 AM IST

Maharaja success meet: மகாராஜா பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு இனி பேனர் கட்டினால் மட்டும் படம் ஓடப்போகிறதா என்று நண்பர்கள் கிண்டல் செய்ததாக விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

மகாராஜா படக்குழு புகைப்படம்
மகாராஜா படக்குழு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தனது வித்தியாசமான கதாபாத்திர தேர்வு மூலம் பிரபலமடைந்து பல்வேறு மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் குரங்கு பொம்மை படத்தை இயக்கி பிரபலமடைந்த நித்திலன் சுவாமிநாதன், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள மகாராஜா படத்தை இயக்கியுள்ளார். மகாராஜா விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும்.

இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யாப், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.40 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மகாராஜா திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "படத்தின் மீது பலருக்கும் பல விமர்சனங்கள் இருந்தது, அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அடுத்த படத்தில் அதை சரி செய்து கொள்கிறேன் என்றவர் சிங்கம்புலியை படத்தில் நடிக்க வைப்பதற்கே பல சிரமங்களை சந்தித்தேன். அவரிடம் கெஞ்சி தான் இந்த படத்தில் நடிக்க வைத்தேன் என்றார்.

ஒரு கதையை எழுதி நிறைய தயாரிப்பாளரை பார்த்தேன், ஆனால் ஆரம்பித்த இடத்தில் தான் வந்தேன். பின்னர் சோர்வாகி, வேறு வழியில்லாமல் ஒரு வருடத்திற்குள் எழுதிய கதை தான் குரங்கு பொம்மை. அதன் பிறகு தான் இந்த திரைப்படம் எடுக்க ஆரம்பித்தோம்" என்று படம் குறித்த அனுபவங்களை பேசினார்.

இதனைதொடர்ந்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "இந்த படத்தின் மீது ஓரளவுக்கு நம்பிக்கையாக இருந்தோம், ஓரளவு தயாரிப்பாளருக்கு போட்ட காசையாவது எடுத்து கொடுத்தால் போதும் என்று நினைத்தோம். அதற்கு காரணம், எனது முந்தைய படங்கள் சரியாக போகாததால், இந்த படத்தின் மீதும் ஒரு கேள்விக் குறி இருந்தது.

மேலும் விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு இனி பேனர் கட்டினால் மட்டும் படம் ஓடப்போகிறதா என்று இரண்டு படத்திற்கு முன்பு என் நண்பர்கள் கிண்டலாக சொன்னார்கள். அந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக இந்த மகாராஜா திரைப்படம் அமைந்தது. மேலும் படத்தின் கதை தொடர்பான கேட்டபோது, கதை வெளியே தெரிந்துவிடும் என்ற எண்ணத்தில் கண்ணியத்துடன் கேள்வி கேட்ட அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.

இதையும் படிங்க: ஏஆர் ரஹ்மான், பிரபுதேவா நட்சத்திர கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு வெளியீடு! - AR Rahman prabhu deva movie title

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.