சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள ஹிட்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபிலில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு ஹிட்லர் திரைப்படத்தின் பாடலை வெளியிட்டனர்.
பின்னர் மேடையில் பேசிய விஜய் ஆண்டனி, "ஹிட்லர் திரைப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிக அளவில் இருக்காது. அடுத்தடுத்து வரக்கூடிய படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறேன். இந்த படத்தில் நான் இசையமைக்கவில்லை. ஆனால் ஒரு பாடலை பாடியுள்ளேன்.
Complete Jukebox of #HITLER out now
— vijayantony (@vijayantony) September 14, 2024
🔗https://t.co/puWl7JhOWI
A @iamviveksiva @MervinJSolomon Musical#HitlerFromSep27#Hitler2024@ChendurFilm @td_rajha @dir_rvs @Dhana236 @menongautham @iriyasuman @actorvivekpra @redinkingsley @thamizh_editor @shantitelefilm @starmusicindia… pic.twitter.com/6GJPj4E3W8
இதையும் படிங்க : நாகேஸ்வர ராவ் 100வது பிறந்தநாள்: திரைப்பட விழாவை நடத்தும் பிவிஆர் ஐநாக்ஸ்! - Nageswara rao 100th Birthday
அடுத்து வரக்கூடிய இரண்டு படங்களில் அனைத்து பாடல்களுக்கும் நானே இசையமைப்பாளர். என் மனைவி சில காலங்களாக எனது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. கூடிய விரைவில் என் மனைவி சகஜமான நிலைக்கு வந்தவுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த கேள்விக்கு, விஜய் நல்ல கலைஞர். தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் விஜய் நடிக்க வாய்ப்பு இல்லை. காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும். விஜய் நண்பர் தான். விஜய் மாநாட்டுக்கு அழைத்தால் கண்டிப்பாக செல்வேன்" என தெரிவித்தார். தொடர்ந்து மேடையிலேயே விஜய் ஆண்டனியை வைத்து ரொமான்ஸ் காட்சிகளோடு வருங்காலங்களில் படம் பண்ணுவேன் என இயக்குநர் கௌதம் மேனன் உறுதி அளித்தார்.