சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'கோட்' (Greatest of all time). இது நடிகர் விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
Just 8 hours more to ignite you with #TheGoatThirdSingle promo 🔥
— venkat prabhu (@vp_offl) August 2, 2024
Promo from Today 7 PM 😁
Song From Tomorrow 6PM😉@actorvijay Sir
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh… pic.twitter.com/ULc3sIWEX2
ஏற்கனவே கோட் படத்தின் இரண்டு பாடல்கள் 'விசில் போடு', 'சின்ன சின்ன கண்கள்' வெளியாகியுள்ளது. இந்நிலையில் கோட் படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு இன்று தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஆக.2) மாலை 7 மணிக்கு மூன்றாவது பாடலின் ப்ரோமோ வெளியாகும் எனவும், நாளை மாலை 6 மணிக்கு முழு பாடல் வெளியாகும் என தெரிவித்து பாடலின் பொஸ்டரை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே வெளியான விசில் போடு பாடலில் விஜய் நடனத்தில் கலக்கியிருப்பார் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இப்பாடலிலும் நடனத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என கூறப்படும் நிலையில், இந்த பாடலில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி இடம் பெற்றுள்ளது போஸ்டரின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "இவனுங்க தொல்ல தாங்க முடியல" - 'கோட்' படம் குறித்து யுவன் வெளியிட்ட அப்டேட்! - Goat 3rd single