ETV Bharat / entertainment

“என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன”.. உதயம் தியேட்டர் மூடப்படுவது குறித்து வைரமுத்து உருக்கம்! - Vairamuthu

Vairamuthu: சென்னையில் உள்ள உதயம் திரையரங்கம் விரைவில் மூடப்படுவதாக வெளியான அறிவிப்பு குறித்து, கவிஞர் வைரமுத்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

உதயம் தியேட்டர் மூடப்படுவது குறித்து வைரமுத்து உருக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 10:11 AM IST

சென்னை: சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள உதயம் திரையரங்கம் விரைவில் மூடப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பிச் செல்லும் திரையரங்குகளில் ஒன்றாக விளங்கியது, உதயம் திரையரங்கம். சென்னையில் அதிகம் மக்கள் புழங்கும் பகுதியில் ஒன்றான அசோக் நகரில் அமைந்ததாலும், குறைந்த விலையில் டிக்கெட் விற்கப்பட்டதாலும் அதிக மக்களை இது ஈர்த்தது.

பின்னர், சென்னையில் பல்வேறு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், புதிய தொழில்நுட்பங்களுடன் தோன்றிய நிலையில், உதயம் திரையரங்கம் காலத்திற்கு ஏற்ப மாறுதல் செய்யாததால் மக்கள் வரவு குறைந்தது. இதனால் உதயம் திரையரங்க உரிமையாளர், திரையரங்கத்தை முன்னணி கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

இவ்வாறு உதயம் திரையரங்கம் மூடப்படுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது. இதயம் கிறீச்சிடுகிறது.

முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன், ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரை வளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன.

மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது. இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம், வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும், நன்றி உதயம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியதால்தான்.. போர் பட இயக்குநர் பிஜோய் நம்பியார் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.