ETV Bharat / entertainment

'உப்பு புளி காரம்' வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Uppu Puli Kaaram Web Series - UPPU PULI KAARAM WEB SERIES

Uppu Puli Kaaram Web Series: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், 'உப்பு புளி காரம்' என்ற வெப் சீரிஸை மே. 30ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்கிறது.

உப்பு புளி காரம் போஸ்டர்
உப்பு புளி காரம் போஸ்டர் (credits - Hotstar X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 3:52 PM IST

சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், 'உப்பு புளி காரம்' வெப் சீரிஸை வரும் மே 30ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது. மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான 'குடும்ப பாட்டு' எனும் தீம் பாடலுடன், இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை, இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த 'உப்பு புளி காரம்' சீரிஸானது காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'உப்பு புளி காரம்' ஒரு வயதான தம்பதி மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களைச் சுற்றிய கதையாகும். இந்த சீரிஸில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, M.ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 'சித்தார்த் 40': 8 தோட்டாக்கள் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சித்தார்த் - Siddharth 40

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.