ETV Bharat / entertainment

ஜெயலலிதா கேரக்டரில் திருச்சி சாதனா.. அரசியல் பேசுகிறதா அறம் செய்? - Trichy sathana

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 7:35 PM IST

Trichy Sathana Aram Sei Movie: பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் 'அறம் செய்' படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேடத்தில் திருச்சி சாதனா நடித்துள்ளார்.

TRICHY SATHANA
திருச்சி சாதனா (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தாராகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகியோர் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள, இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார்.

நான் யூடியூபில் பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார். இவரிடம் உள்ள நல்ல விஷயம் வசனத்தை முதல் நாளே போனில் அனுப்பிவிடுவார். அவர் எழுதிய டயலாக்கை அப்படியே சொன்னேன். அப்போதே தெரியும், இந்தப்படம் கண்டிப்பாக சர்ச்சையில் சிக்குமென்பது. முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மைச் சம்பவங்களை எடுத்திருக்கிறார்.

ஆனால், போஸ்டரில் இப்படத்தில் அரசியல் இல்லை என பொய் சொல்லியிருக்கிறார். இன்று எனக்கு தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் அதிகம் இருக்கிறார்கள். நான் எப்போதும் தவறான தகவலைப் பேசுவதில்லை. நான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எல்லோரையும் விமர்சனம் செய்கிறேன். ஆனால், என் சில வீடியோக்களை மட்டும் பார்த்துவிட்டு தவறாக பேசுகிறார்கள். நான் அரசியல்வாதி கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் ஒரு சிறு அசைவு கூட சரியாக வர வேண்டும் என அடம்பிடித்து எடுப்பார். டயலாக்கை எல்லாம் மாற்றவிடமாட்டார். மிக நன்றாகப் படத்தை எடுத்துள்ளார்” என்றார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி சாதனா பேசுகையில், “எனக்கு மிக சந்தோசமாக இருக்கிறது, அறம் செய் இசை விழா பிரமாண்டமாக இருக்கிறது. அரசியல் சம்பந்தமான ஒரு படத்தை துணிந்து மிக தைரியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த ரோலில் எல்லோரும் நடிக்க மறுத்துவிட்டார்கள். நீ நடிக்கிறாயா எனக் கேட்டார், எனக்கு தயக்கமாக இருந்தது.

எல்லோரும் அரசியல் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை எடுப்பதாக இயக்குநர் சொன்னார். எனக்கு தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். இந்த படத்திற்காக ஜெயலலிதா அம்மாவின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்து கற்றுக்கொள்ளச் சொன்னார். வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் ஆதரவை இந்த திரைப்படத்திற்கு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

பின்னர், நடிகர் ஜீவா பேசுகையில், “பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப் படத்தின் நாயகன். இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். இயக்குநர் கடைசி வரை கதையேச் சொல்லவில்லை. அவர் சொன்னதைத் தான் எல்லோரும் செய்துள்ளோம். பயில்வான் அண்ணன் நல்ல கேரக்டர் செய்துள்ளார். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். வெற்றி அண்ணன் வில்லனாக நடித்திருக்கிறார். நாங்கள் பார்த்தவரைக்கும் சாவித்திரி மேடத்தின் அன்பான அழைப்பில் தான் இந்த விழாவிற்கு வந்தேன்” என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் ஜாலி கேரக்டரில் அஜித்.. குட் பேட் அக்லி செகண்ட் லுக் வெளியானது! - Good bad ugly Second look

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.