ETV Bharat / entertainment

சுதந்திர தின ரேசில் ஜெயிக்கப் போவது யார்? ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் 4 படங்கள்! - August 15 Release Tamil Movies

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 7:07 PM IST

Tamil Cinema: தமிழ் சினிமாவில் சுதந்திர தினத்தன்று தங்கலான், அந்தகன், ரகு தாத்தா, டிமான்ட்டி காலனி 2 ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது.

four movies posters
four movies posters (Credits - film celebrities social media pages)

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. ஆனால், அடுத்த ஆறு மாதம் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கின்றன.

சமீபத்தில், கமல் நடித்த இந்தியன் 2 படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி ராயன் படம் வெளியாக உள்ளது. பின்னர், ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்க்கு படங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த படத்துக்குப் போவது என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அந்த வகையில், வரும் ஆக.2ஆம் தேதி வெங்கட் பிரபு தயாரித்துள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு, விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன், யோகி பாபு நடிப்பில் போட், தெருக்கூத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஜமா, நகுல் நடிப்பில் உருவாகி உள்ள வாஸ்கோடகாமா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதனைத் தொடர்ந்து ஆக.9ஆம் தேதி மின்மினி படம் வெளியாக உள்ளது.

இப்படி இருக்கையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் சுதந்திர தினமான ஆக.15ஆம் தேதியை டார்கெட் செய்துள்ளன.

அந்த வகையில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படமும், நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி உள்ள டிமான்ட்டி காலனி 2 படமும், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ரகு தாத்தா படமும், பிரசாந்த் நடிப்பில் உருவாகி உள்ள அந்தகன் படங்களும் ஆக.15 ஆம் தேதி வெளியாகின்றன.

இந்த 4 படங்களில் இரண்டு படங்கள் நேரடியாக எடுக்கப்பட்டவை. அதாவது இரண்டாம் பாகங்களின்றியும், எந்த மொழியில் இருந்து இல்லாமலும் எடுக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள இரு படங்களில், இந்தியில் ஆயுஷ்மான் நடிப்பில் உருவாக்கப்பட்ட அந்தாதூன் படத்தின் ரீ மேக்கே அந்தகன் ஆகும். டிமான்ட்டி காலனி 2 முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும்.

தமிழ் சினிமாக்கு இரண்டாம் பாகம் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. பெரிய பட்ஜெட் படம் முதற்கொண்டு சிறிய பட்ஜெட் படங்கள் வரை இரண்டாம் பாகமானது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியையும், வசூலையும் கொடுப்பதில்லை. அந்த வகையில், தமிழ் சினிமாவில் சிங்கம் 2, அரண்மனை 2, முனி 2 (காஞ்சனா), உள்ளிட்ட படங்கள் தான் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற்றன. இந்நிலையில், சுதந்திர தின ரேசில் எந்த படம் ஒர்க் அவுட் ஆக போகின்றது என பொருத்திருந்து பார்க்கலாம்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (CREDITS - ETV BHARAT TAMIL NADU)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சந்திரலேகா படத்தில் முதலில் இவர்தான்.. ஆனால் இறுதியில்.. வனிதா விஜயகுமார் ஓபன் டாக்! - ANTHAGAN SONG RELEASED

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.