ETV Bharat / entertainment

சங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; தயாரிப்பாளர்களுக்கு பறந்த கடிதம்! - Tamilnadu film producers council

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 2, 2024, 1:50 PM IST

Tamilnadu film producers council: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரித்து வரும் படங்களின் நிலை குறித்தும், புதிய படங்கள் தொடங்குவது குறித்த தகவலை கடிதம் மூலம் அனுப்புமாறு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதுப் படங்களின் படப்பிடிப்பு நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, அவரது புதிய படங்கள் தொடங்குவதில் தற்காலிக நிறுத்தம், எட்டு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய முடிவுகளையும் தீர்மானங்களாக நிறைவேற்றி அறிக்கை ஒன்றை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கம், உடனடியாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தங்களுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களுக்கு சங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில் "திரைப்படங்கள் வெளியீட்டில் உள்ள சிரமங்களை கலையவும், சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்க வழி செய்யவும், சினிமா வியாபாரத்தில் வரவு குறைந்து செலவு அதிகரித்திருப்பதை ஒழுங்குபடுத்தவும், தேங்கி நிற்கும் திரைப்படங்களை வெளியீடு செய்து வருமானத்திற்கு வழி செய்யவும் திரைப்பட முதலாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இனிவரும் காலங்களில் படமெடுப்பவர்களுக்கு நஷ்டமில்லாத சூழ்நிலையை உருவாக்கவும், நடிகர்கள், தொழிலாளர்கள், அனைவருக்கும் தொழில் பாதுகாப்பு வழங்கவும், திரைத்துறையை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டி இருப்பதால் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மேலும் நமது சங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம். திரைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள், பாதி படம் முடித்தவர்கள், படங்களின் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பவர்கள், புதிதாக திரைப்படம் துவங்குபவர்கள் என அனைவரும் தங்களது தற்போதைய சூழலை தயவு செய்து உடனடியாக கடிதம் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஹெல்மெட் அணியாததால் ரூ.2 ஆயிரம் அபராதம் - நடிகர் பிரசாந்த் அளித்த விளக்கம் - ACTOR PRASANTH ABOUT HELMET ISSUE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.