ஹைதராபாத்: நடிகை சமந்தா, நாக சைதன்யா பிரிவிற்கு தெலங்கானா பி.ஆர்.எஸ் கட்சி செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம் என்று தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா கூறியதற்கு சமந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரும் கடந்த 2021இல் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில், தெலங்கானா வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா, ”சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பெற்றதற்கு பிஆர்எஸ் கட்சி செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம்” என கூறியுள்ளார். இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
గౌరవనీయ మంత్రివర్యులు శ్రీమతి కొండా సురేఖ గారి వ్యాఖ్యలని తీవ్రంగా ఖండిస్తున్నాను. రాజకీయాలకు దూరంగా ఉండే సినీ ప్రముఖుల జీవితాలని, మీ ప్రత్యర్ధులని విమర్శించేందుకు వాడుకోకండి. దయచేసి సాటి మనుషుల వ్యక్తిగత విషయాలని గౌరవించండి. బాధ్యత గలిగిన పదవి లో ఉన్న మహిళగా మీరు చేసిన…
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2024
அந்த பதிவில், “பெண்ணை ஒரு பொருளாக பார்க்கும் மிகவும் கவர்ச்சிகரமான இந்த சினிமா துறையில், சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னையை எதிர்கொண்டு, மீண்டு வருவதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. இந்த பயணத்தில் நான் பெருமை கொள்கிறேன். அமைச்சர் கொண்டா சுரேகா, ஒரு அமைச்சராக நீங்கள் கூறிய கருத்து தவறானது என உணர்ந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
ஒரு தனிமனித உரிமைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என நம்புகிறேன். எனது விவாகரத்து என்பது சொந்த விஷயம். அதனைப் பற்றி யூகங்களை தவிர்க்க வேண்டும். எனது விவாகரத்து எங்களது இருவரின் சம்மதத்துடன் நடந்துள்ளது. அதில் எந்த வித அரசியல் தலையீடும் இல்லை. அரசியல் விவகாரத்தில் எனது பெயரை பயன்படுத்த வேண்டாம். நான் அரசியல் விஷயத்தில் தலையிட மாட்டேன், கடைசி வரை அவ்வாறே இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் கொண்டா சுரேகா கருத்திற்கு நடிகர் நாகர்ஜுனா மற்றும் அவரது மனைவி அமலா அக்கினேனி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் நாகர்ஜுனா வெளியிட்ட பதிவில், “அமைச்சர் கொண்டா சுரேகா கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் ஒரு அரசியல்வாதியை விமர்சிக்க அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு சினிமா நட்சத்திரத்தின் வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம். தனிமனித உரிமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும்” என கூறியுள்ளார்.
నా వ్యాఖ్యల పట్ల మీరు కానీ, మీ అభిమానులు కానీ మనస్తాపానికి గురైనట్లైతే బేషరతుగా నా వ్యాఖ్యలను పూర్తిగా ఉపసంహరించుకుంటున్నాను.. అన్యద భావించవద్దు.
— Konda surekha (@iamkondasurekha) October 2, 2024
இதையும் படிங்க: 'Leading Light' ஆவணப்படம் எடுத்து விருது வென்ற சூர்யா மகள் - ஜோதிகா நெகிழ்ச்சி! - leading light
இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “எனது கருத்து சமந்தா மற்றும் அவரது ரசிகர்களை காயப்படுத்தியிருந்தால், உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்