ETV Bharat / entertainment

அரண்மனை 4 ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்! - Aranmanai 4 OTT release - ARANMANAI 4 OTT RELEASE

Aranmanai 4: சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aranmanai 4
அரண்மனை 4 (Credits - Disney+ Hotstar Tamil 'X' page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 9:07 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் இயக்குநர் சுந்தர் சி. காமெடி படங்களை கமர்ஷியல் கலந்து கொடுப்பதில் வித்தகரான இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, கலகலப்பு உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கிய அரண்மனை என்ற படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் படமாக உருவான இப்படத்தை தொடர்ந்து, அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வெற்றி கண்டார். அந்த வகையில், அரண்மனை 4 எடுக்கப்பட்டது.

நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் இதற்கு முன்னர் வெளியான அரண்மனை சீரிஸ் (Aranmanai series) படங்களைப் போல, ஹாரர் த்ரில்லர் படமாக உருவானது. ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்துள்ள இப்படம், கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தை Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இந்த நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அரண்மனை 4 படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.