சென்னை: நடிகர் விக்ரம் ’மாவீரன்’ பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீசரில் விக்ரம் காரை விட்டு இறங்கும் காட்சி சூப்பர் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். யூடியுபில் வீர தீர சூரன் டீசர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. வீர தீர சூரன் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.
#ChiyaanVikram & #MadonneAshwin Project is Confirmed..✅🔥 To be Produced by Shanthi Talkies (Maaveeran)..⭐ Gonna be a Very Interesting project to look forward to..💯 Chiyaan on the Right Track..🤝 pic.twitter.com/LrbrGtFc2G
— Laxmi Kanth (@iammoviebuff007) December 11, 2024
இதையும் படிங்க: மதுரையில் ரஜினிக்கு கோயில்.. 300 கிலோவில் சிலையை பிரதிஷ்டை செய்த தீவிர ரசிகர்..!
இதனிடையே விக்ரமின் 63வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ’விக்ரம் 63’ படத்தை சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வணிக ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றது. வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குநர்கள் படங்களில் நடிக்க விரும்பும் விக்ரம், மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.