ETV Bharat / entertainment

'புஷ்பா 2' ரிலீசான சில மணி நேரங்களில் ஆன்லைனில் வெளியானதாக தகவல்... படக்குழு அதிர்ச்சி! - PUSHPA 2 LEAKED ONLINE

'Pushpa 2' leaked online: அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், மொத்த படமும் ஆன்லைனில் லீக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது

புஷ்பா 2 போஸ்டர்
புஷ்பா 2 போஸ்டர் (Photo: Film poster)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 5, 2024, 2:58 PM IST

சென்னை: ’புஷ்பா 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில் ஆன்லைனில் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது ’புஷ்பா 2’. கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

அல்லு அர்ஜூன் புஷ்பா திரைப்படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமானார். அதுமட்டுமின்றி புஷ்பா முதல் பாகத்திற்காக அல்லு அர்ஜூன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் தேசிய விருது வென்றனர். தெலுங்கு சினிமாவில் முதல் தேசிய விருது வென்ற நடிகர் என்ற சாதனையை படைத்தார். தெலுங்கு சினிமாவிற்கு புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாக முக்கியமான படமாக கருதப்படுகிறது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடைபெற்ற நிலையில், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

இப்படத்தின் kissik song மற்றும் peelings ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் இன்று உலக அளவில் 12,500 திரைகளில் பிரமாண்டமாக பல்வேறு மொழிகளில் வெளியானது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் தனது ரசிகர்களுடன் படத்தை கண்டுகளித்தார். புஷ்பா 2 முன்பதிவில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், முதல் நாளில் உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நாக சைதன்யாவுடன் திருமணம், தாலி கட்டியவுடன் உணர்ச்சிவசப்பட்ட சோபிதா; வீடியோ வைரல்!

இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் முழுவதும் ஆன்லைனில் லீக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது. தவறான முறையில் tamilrockers, tamilyogi உள்ளிட்ட இணையதளங்களில் மிகவும் தெளிவான ஹெச்டி(HD) தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 திரைப்படம் ஆன்லைனில் லீக்கான தகவல் வெளியான நிலையில், அதிர்ச்சியில் உள்ள படக்குழு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாகுபலி, கல்கி 2898AD, கோட் ஆகிய படங்கள் ஆன்லைனில் லீக்கானது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.