ETV Bharat / entertainment

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் 'குரங்கு பெடல்' ஃபர்ஸ்ட் லுக் டீசர் எப்படி இருக்கு? - kurangu pedal movie

Kurangu pedal: இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கி, நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 'குரங்கு பெடல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது.

KURANGU PEDAL MOVIE
KURANGU PEDAL MOVIE
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 3:31 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக வளர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர், நடிப்பு மட்டுமின்றி நல்ல கதைகளைத் தேர்வு செய்து தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தும் வருகிறார்.

KURANGU PEDAL MOVIE
KURANGU PEDAL MOVIE

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கும் 'குரங்கு பெடல்' படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிடவுள்ளது. அதற்கான ஃபர்ஸ்ட் லுக் டீசருடன், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த டீசரில், தமிழ்நாட்டின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980களின் கோடைக்காலத்திற்குப் பார்வையாளர்களைப் படம் கொண்டு செல்கிறது. சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சி பெறத் துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை அந்த டீசர் வெளிக்காட்டுகிறது. ராசி அழகப்பன் எழுதிய ’சைக்கிள்’ சிறுகதையால் ஈர்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கமலக்கண்ணன் படம் உருவாக்குவதில் தனது புதுமையான அணுகுமுறை மற்றும் தனித்துவமான பாணிக்காகப் பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘மதுபானக்கடை’, ’வட்டம்’ போன்ற படங்கள் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. கடந்த 2012 இல், அரவிந்தன் புரஸ்காரத்தில் சிறப்புக் குறிப்புடன் சிறந்த அறிமுக இயக்குநராக அங்கீகரிக்கப்பட்டார் கமலக்கண்ணன்.

அடுத்த ஆண்டே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த தயாரிப்பாளர் என்ற பட்டத்தைப் பெற்றார். கோயம்புத்தூர் ரோட்டரி சங்கத்தின் சிறந்த சமூக விருதையும் 2009 ஆம் ஆண்டில் பெற்றார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர், ரத்தீஷ் மற்றும் சாய் கணேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட புகழ்பெற்ற குழந்தைகள் நிபுணர் நந்தகுமார் இந்த இளம் திறமையாளர்களுக்கு 45 நாட்கள் நுட்பமாக நடிப்பு பயிற்சி அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில், பிரபல குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நக்கலைட்ஸ் பிரசன்னா பாலச்சந்தர் மற்றும் ஜென்சன் திவாகர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயனும், கலை அரசனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் பேரனைக் காதலிக்கிறாரா ஜான்வி கபூர்? - Janhvi Kapoor Shikhar Pahariya

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.