சென்னை: தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்து வருகிறது. இவரது டாக்டர், டான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக அமைந்தது. அவரது முந்தைய படமான மாவீரனும் அவருக்கு வெற்றி படமாகவே அமைந்தது எனலாம்.
வரவேற்பை பெரும் அமரன் கதாபாத்திரங்கள்: இந்த நிலையில் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகி உள்ள படம் 'அமரன்'. இந்த படம் தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இதில் சிவகார்த்திகேயன் (மேஜர் முகுந்த் வரதராஜன்) ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி (மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா) நாயகியாகவும் நடித்துள்ளார்.
I'm incredibly proud to unveil the trailer of our #Amaran - https://t.co/PMQG1mATyp.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 23, 2024
A story that honors the extraordinary lives of #MajorMukundVaradarajan and #IndhuRebeccaVarghese, as well as the brave journey of every Indian Army man. Let's celebrate the courage and sacrifice…
சினிமா துறையில் நடிகைகள் மேக் அப், சிகிச்சை, திரபி என தங்களை அழகாய் மற்றி கொள்ளுவதற்கு மத்தியில் தனது எளிமையான தோற்றதாலும், இயற்கையாகவே அழகு என அழைக்கப்படும் நாயகியாக ரசிகர்களை ஈர்த்தவர் சாய்பல்லவி. முன்னதாக வெளியான அமரன் படத்தின் டீசர் மற்றும் இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தின் ரிவில் வீடியோ மூலம் சாய்பல்லவி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: ’சூரரைப் போற்று’ திரைப்படம் முன்பு எனக்கு சோதனையான காலகட்டம்... மனம் திறந்த சூர்யா!
தமிழக ராணுவ வீரரின் கதை: ஏற்கனவே பாலிவுட், டோலிவுட்டில் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ஷெர்ஷா, சீதா ராமம் போன்ற படங்கள் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தமிழ் மண்ணின் இராணுவ வீரரின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கும் முயற்சி அனைவரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் தமிழக வீரரின் கதை: அமரன் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஹே மின்னலே, வெண்ணிலவு சாரல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் அறிவு பாடிய ராப் பாடலும் வரவேற்பை பெற்ற நிலையில், இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், மேஜர் முகுந்த் வரதராஜன் கதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாகவும், அவரது கதையை கூற வேண்டும் என முடிவு செய்து இப்படத்தில் நடித்ததாகவும் கூறினார்.
"அமரன்" படத்தின் டிரெய்லர் வெளியானது: இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அமரன் திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் டிரெய்லரை கமல்ஹாசன் வெளியிட்டார். மலையாள டிரெய்லரை டொவினோ தாமஸ் வெளியிட்டார்.
டிரெய்லரில் ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் மிரட்டுகிறார். ராணுவ அதிகாரி ஆவதுதான் எனது லட்சியம் என உறுதியுடன் இருக்கும் சிவகார்த்திகேயன். நினைத்தது போலவே ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக எதிரிகளிடம் போராடுவது டிரெய்லரில் காட்டப்படுள்ளது. மேலும் கதையின் முக்கிய நகர்வாக மகள் பாசம், மனைவியின் காதல், தேசப்பற்று உள்ளிட்ட உணர்வுகள் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ள தேசப்பற்று மிக்க வசனங்கள் ஜிவி. பிரகாஷின் பின்ணனி இசையுடன் இணைந்து மெய்சிலிக்க வைத்துள்ளது எனலாம். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த திபாவளிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவரையும் ஈர்க்கும் படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்