ETV Bharat / entertainment

மருத்துவ உதவி நாடிய நடிகர் வெங்கல் ராவ்.. உதவிக்கரம் நீட்டிய சிலம்பரசன்! - Actor Vengal rao medical Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 3:10 PM IST

Updated : Jun 26, 2024, 3:23 PM IST

Actor Vengal rao medical Issue: பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ், ஒரு கை, கால் செயலிழந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சினிமா கலைஞர்களிடம் தனக்கு மருத்துவ உதவி வேண்டி வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில், அவருக்கு நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

நடிகர் வெங்கல் ராவ் புகைப்படம்
நடிகர் சிலம்பரசன் மற்றும் வெங்கல்ராவ் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் வெங்கல் ராவ். ஸ்டண்ட் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய வெங்கல் ராவ், பிற்காலத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடிகர் வடிவேலுவுடன் 30க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும், மேலும் பல படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார். வடிவேலுவுடன் வெங்கல் ராவ் இணைந்து தலைநகரம், சீனாதானா படங்களில் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம்.

நடிகர் வெங்கல் ராவ் பேசும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கல் ராவ், வடிவேலு நாயகனாக நடித்த படங்களிலும் நாயகனாக நடித்த நிலையில், தற்போது வடிவேலு குறைவான படங்களில் மட்டுமே நடித்து வருவதால், இவருக்கும் பட வாய்ப்புகள் குறைந்தது. இந்நிலையில் வெங்கல் ராவ் ஒரு கை, ஒரு கால் செயலிழந்து, தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இவர், மருத்துவச் செலவிற்கு நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் தனக்கு உதவுமாறு வீடியோ வெளியிட்டு உதவி கோரியுள்ளார். இந்த நிலையில், உடல் நலக்குறைவால் ஆந்திராவில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வரும் வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காக திரைப்பட நடிகர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், நடிகர் சிலம்பரசன் இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: சென்சார் சான்றிதழ் பெற்றது விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன்! - Mazhai Pidikkatha Manithan

Last Updated : Jun 26, 2024, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.