சென்னை: சித்தார்த் நடித்துள்ள ’மிஸ் யூ’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்காநாத், கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’மிஸ் யூ’ (Miss You). இத்திரைப்படம் நேற்று (டிச.13) திரையரங்குகளில் வெளியானது. சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் சித்தார்த் சாலை விபத்தில் சிக்கி தலையில் அடிபடுகிறது.
இதனால் பழைய நினைவுகளை இழந்த நேரத்தில் நாயகி ஆதிகா ரங்கநாத்தை காதலிக்கிறார். பின் தனது அம்மாவிடம் ஆஷிகாவிடம் பெண் கேட்கும்படி சொல்கிறார். இதனையடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்களே ’மிஸ் யூ’ படத்தின் கதை. இப்படத்தில் நடிகர் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பு பாராட்டை பெற்று வருகிறது. இப்படம் சமூக வலைதளத்தில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
#MissYouMovie : A decent film. 1st half has some comedy scenes . Few worked. Few was cringe. Songs and it's placement are worst. Interval twist good. 2nd half > 1st half. No adult content. Story and screenplay good. Rom - com movie lovers give a try. Good watch 👍🏻#MissYou pic.twitter.com/OhyhvYqzL3
— Say My Name (@SayMyName2005) December 13, 2024
முதல் பாதி நன்றாக உள்ளதாகவும், இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் பதிவிட்டு வருகின்றனர். மிஸ் யூ குறைந்த ரன் டைம் படத்திற்கு உதவுவதாகவும் தெரிவிக்கின்றனர். மற்றொரு ஆன்லைன் விமர்சனத்தில் வித்தியாசமான கதையுடன், எதிர்பார்க்காத இடைவெளி ட்விஸ்டுடன் ஃபீல் குட் திரைப்படம் என பதிவிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக மிஸ் யூ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
#MissYou - A Decent Romantic Feel-Good Movie With A Unique Storyline. Unpredictable Interval Twist, Bus Scene, Climax Coffee Shop Scene👏If You Enjoy Feel-Good Romantic Films, Give It A Try. pic.twitter.com/ts2nhdPRi5
— Trendswood (@Trendswoodcom) December 13, 2024
இதையும் படிங்க: "20 ஆண்டுகளில் இதுபோன்ற துயர சம்பவம் நடந்ததில்லை"... சிறையில் இருந்து விடுதலையான அல்லு அர்ஜூன் பேட்டி! - ALLU ARJUN RELEASED
மேலும் தியேட்டரில் டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல் மிர்ச்சி சிவா நடிப்பில் நேற்று வெளியான ’சூது கவ்வும் 2’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. சித்தார்த் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், மிஸ் யூ திரைப்படமும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.