ETV Bharat / entertainment

ரீவைண்ட்.. கமல்ஹாசனின் இந்தியன் 1 ரீரிலீஸ் தேதி அறிவிப்பு! - Indian movie rerelease - INDIAN MOVIE RERELEASE

Indian Rerelease: ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் 1 திரைப்படம் வருகிற ஜூன் 7ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian 1 rerelease poster
இந்தியன் 1 ரீரிலீஸ் போஸ்டர் (Credits - AM Rathnam 'X' page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 7:37 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். இவரது படத்தில் பாடல்களே மிகப் பிரமாண்டமான முறையில் எடுக்கப்படும். இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தை ஏஎம் ரத்னம் தயாரித்திருந்தார்.

இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோரும், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. லஞ்சம் வாங்குபவர்களை இந்தியன் தாத்தாவான கமல்ஹாசன் கொலை செய்வதும், பெற்ற மகனே தவறு செய்தாலும் தண்டிக்கும் நபராக கமல்ஹாசன் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். அதேநேரம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

மேலும், இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வருகிறது. அந்த வகையில், இந்தியன் இரண்டாம் பாகம் வருகிற ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாகத்தினை அதன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் வருகிற ஜூன் 7ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், இந்த இந்தியன் முதல் பாகத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லரும் நாளை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலையில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், இந்தியன் முதல் பாகம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்! - Ilayaraja Vs Manjummel Boys

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.