ETV Bharat / entertainment

நீண்ட நாட்களுக்கு பின் சென்னை வந்த சமந்தாவிற்கு உற்சாக வரவேற்பு..! - samantha podcast

Actor Samantha: சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்த சமந்தாவிற்கு உற்சாக வரவேற்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 3:50 PM IST

Updated : Feb 17, 2024, 5:14 PM IST

ஹைதராபாத்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுக் கடந்த சில மாதங்களாகச் சிகிச்சையிலிருந்தார். தற்போது, முழுமையாக மயோசிடிஸ் நோயிலிருந்து குணமடைந்த சமந்தா மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் சென்னை உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் “சொந்த ஊரின் கிடைக்கும் அன்பு தனித்துவமானது. #சத்தியபாமாபல்கலைகழகம் #சென்னை” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், தற்போது சமந்தா போட்காஸ்ட் ஒன்றைத் துவக்கியுள்ளார். உடல்நிலை சம்மந்தப்பட்ட போட்காஸ்ற்கு take20 எனப் பெயரிட்டுள்ளார். மேலும், சமந்தா விரைவில் யூடியூப் சேனல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சமந்தா மீண்டும் நடிக்கத் தொடங்கிய நிலையில், தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா என்னும் வெப் தொடரில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டா-வுடன் 'குஷி' என்னும் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் பறக்கச் செய்த மைம் கோபி!

Last Updated : Feb 17, 2024, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.