சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சூர்யா 45’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘சூர்யா 45’ படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் அறிவிக்கப்பட்டிருந்தார். பட அறிவிப்பின் போது அவர் பெயர் போட்ட போஸ்டர்கள் வெளியானது. மேலும் ஆர்.ஜே.பாலாஜி ஒரு நேர்காணலிலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.
We're thrilled to welcome @SaiAbhyankkar, a rising star in the music industry, to #Suriya45.@Suriya_offl @dop_gkvishnu @RJ_Balaji @prabhu_sr pic.twitter.com/O26KvV2uUV
— DreamWarriorPictures (@DreamWarriorpic) December 9, 2024
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் ‘சூர்யா 45’ படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ‘சூர்யா 45’ படத்திற்கு புதிய இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ‘சூர்யா 45’ படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
20 வயதான இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த ஆண்டு மிகவும் பிரபலமடைந்த 'ஆசை கூட', 'கட்சி சேர' உள்ளிட்ட ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'பென்ஸ்' திரைப்படத்திற்கும் இசையமைப்பத்து வருகிறார். அதுமட்டுமின்றி சாய் அபயங்கர் பிரபல பாடகர்கள் திப்பு, ஹரினி தம்பதியின் மகனாவார்.
இதையும் படிங்க: விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் ஜிவி பிரகாஷ், சைந்தவி; ‘பிறை தேடும் இரவிலே’ பாடலை மனமுருகி கேட்கும் ரசிகர்கள்!
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், பிரபல நடிகர் சூர்யா படத்திற்கு இசையமைப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அபயங்கர் பெரிய படத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யா, ஏ.ஆர்.ரகுமான் காம்போவில் சில்லுனு ஒரு காதல், ஆயுத எழுத்து, 24 ஆகிய படங்கள் மாபெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.