சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், நடிகருமாக வலம் வருபவர் வெங்கட்பிரபு. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான முறையிலும், காமெடியாகவும் அமையும்.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிப்பில், ஆனந்த் இயக்கி நடித்துள்ள படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இதில், லீலா, குமரவேல், விசாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்.ஜே.விஜய், இர்பான், வில்ஸ்பாட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்.ஜே.ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபெனி ஆலிவர், தர்மா, வினோத், பூவேந்தன், மதன் கௌரி, ஜெரோம், ரெமிகாஸ், பிரவீன், சாய் வெங்கடேஷ் மற்றும் தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸூடன் இணைந்து மசாலா பாப்கார்னின் ஐஸ்வர்யா அண்ட் சுதா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதுகுறித்து ஆர்.ஜே.விஜய் கூறும்போது, "வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் நல்ல நடிகராக உருவாக உதவும் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தேவை. இப்படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்த ஆனந்த் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி.
என் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் எளிதில் கனெக்ட் செய்து கொள்ள முடியும். படக்குழுவில் நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்களாகி விட்டோம். ஆனந்த் இயக்குநராகவும், நடிகராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இந்த படம் வெளியான பின்பு, இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக ஆனந்த் இருப்பார் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 2 அன்று படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் உள்ளேன்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: விஜய் - சீமான் - நான்.. அமீர் கொடுத்த அரசியல் அப்டேட்! - Ameer about Vijay