ETV Bharat / entertainment

“அட்லீஸ்ட் அவர் பையன் கூடவாது நடிக்கனும்..” - ரவீனா குறிப்பிட்டது யாரை? - Half Bottle album song - HALF BOTTLE ALBUM SONG

Half Bottle Ablum Song: எழில்வானன் மற்றும் ரவீனா நடித்துள்ள ஹாப் பாட்டில் என்ற ஆல்பம் பாடலின் வெளியீட்டு விழா இன்று (ஏப்.25) சென்னையில் நடைபெற்றது.

சென்னை
சென்னை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 9:11 PM IST

சென்னை: அமெரிக்க வாழ் சாப்ட்வேர் இன்ஜினியரான எழில்வானன் மற்றும் ரவீனா நடித்துள்ள 'ஹாப் பாட்டில்' என்ற ஆல்பம் பாடலின் வெளியீட்டு விழா இன்று (ஏப்.25) சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவீனா கூறுகையில், "பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதன்பிறகு இந்த வாய்ப்பு வந்தது. எந்தவொரு படமும் பண்ணவில்லை. தெரிந்த ஒருவர் மூலம் இந்த வாய்ப்பு வந்தது. ஷூட்டிங் ஸ்பாட் போய் நடிக்கும் போது தான் கதையே தெரியும்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

பிக்பாஸ் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வரும். எனக்கும் நிறைய கதை வருகிறது. எதிர்காலத்தில் அப்டேட்ஸ் வரும்.‌ பிக்பாஸ் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதை மக்கள் தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் மூலம் நிறைய பேருக்கு என்னை தெரிந்திருக்கிறது.‌ அதனால் பிக்பாஸ் எனக்கு தேவை தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ரீல்ஸ் என்பது என்டர்டெயின்மென்ட் தான்.‌ இருப்பதை சரியாக பயன்படுத்த வேண்டும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை தொடர்பு கொண்டு கேட்டனர். ஆனால், நான் அப்போது ஜோடி நிகழ்ச்சியில் இருந்தேன். எனக்கு நகைச்சுவை வராது. நல்ல கோமாளிகள் இருக்கும் போது நான் எதற்கு?

எனக்கு நடிகர் விஜய் கூட நடிக்கனும்னு ஆசை. ஆனால், அப்படி நடிக்க முடியுமான்னு தெரியவில்லை. அட்லீஸ்ட் அவங்க பையன் கூடவாவது நடிக்கனும்னு தான் ஒரு இன்டர்வியூல சொல்லிருந்தேன். ஆனால், சிலர் அதனை தவறாக புரிந்துகொண்டனர்" எனப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து எழில்வானன் பேசுகையில், "எனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பாடல் எடுக்கவில்லை. நெகடிவ் வைப்ஸ் தான் அதிகமாக வருகிறது. பரவாயில்லை. நமக்கு பிடித்த விஷயத்தை செய்கிறோம் அவ்வளவுதான்.

ரவீனாவுடன் வேலை செய்தது நன்றாக இருந்தது. ரவீனா சீனியர் நடிகை. நான் ஆஃப் பாட்டில் தான். சிறிய வயதில் இருந்தே ஒரு ஆசை. இந்த மாதிரி ஏதாவது செய்ய வேண்டும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: 'வருஷத்துக்கு ஒரு படம் பண்ணுங்க' - விஜயிடம் வேண்டுகோள் விடுத்த கில்லி ரீ ரிலீஸ் விநியோகஸ்தர்! - Ghilli Re Release

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.