ETV Bharat / entertainment

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25வது படம் அறிவிப்பு போஸ்டர் வெளியானது! - Raghava Lawrence 25th film - RAGHAVA LAWRENCE 25TH FILM

தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25வது படம் குறித்த அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Eராகவா லாரன்ஸ் நடிக்கும் 25வது படம் அறிவிப்பு போஸ்டர்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25வது படம் அறிவிப்பு போஸ்டர் (Credits - Raghava Lawrence X Page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 15, 2024, 3:10 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடனம், நடிப்பு மட்டுமின்றி, இயக்குனராகவும் அறியப்படுபவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த முனி பட பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் சமீபத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியானது.

இந்நிலையில், தெலுங்கில் ’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா மற்றும் நீலாத்ரி புரொடக்சன்ஸ் இணைந்து நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார் என படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : கைதிக்குப் பிறகு மெய்யழகன் படத்தில் தான்.. சர்ப்ரைஸ் உடைத்த கார்த்தி! - Meiyazhagan

அந்த போஸ்டரில், 'BIG ACTION ADVENTURE BEGINS' என்ற வாசகத்துடனும், ராகவா லாரன்ஸின் நிழல் உருவமும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் கேரக்டர்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்குவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படம் என்பதாலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாராக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.